என் நண்பர் தமிழண்ணலும் காரைக்குடியில் இருந்து திண்டுக் கல்லுக்குச் செல்ல நேர்ந்தது. பேருந்திற் செல்லும் பொழுது முருகப்பனாரைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். உந்து விரைவாக ஓடியது. உரையாடல் சுவையாக நடந்தது. பின்னர் உரையாடல் நின்றது. கவிதை பிறந்தது. திண்டுக்கல்லில் முத்து நல்லப்பன் என்ற நண்பர் இல்லத்துக்குச் சென்றதும் அவரி டத்தில் அக் கவிதையைச் சொன்னேன். அந் நண்பர் மகிழ்ந்து அவர் பெயர் பொறித்த மஞ்சள் நிற அஞ்சலட்டை ஒன்றைத் தந்து அப்பாடலை எழுதுவித்து முருகப்பனார்க்குச் செலவிடுத்தனர். அப்பாடலைக் கண்ட முருகப் பனார் பெருங்களிப் புற்று 'நான் கம்பராமாயணத்தைத் தொட்டுப் படும்பாடு பெரிது தான். ஐந்தாண்டுகளாக இது நடந்துகொண்டிருக் கிறது. ஆனால் சில நிமிடங்களில் உதித்த தங்கள் பாடல்கள் என்னுடைய ஐந்தாண்டுத் திகைப்புக்கு மாற்றாகி, மருந்தாகிவிட்டன' என நெஞ்சு நெகிழ்ந்து எழுதியிருந்தார். அவரை மனமுருகச் செய்த பாடல்கள் 'முடியரசன் கவிதைகள்' என்னும் நூலில் வெளிவந்துள்ளன. அவை இவைதாம். ` கம்பன் புகன்றதெனக் கட்டுரைத்த பாக்கடலுள் நம்பிக் குளித்து நலங்கண்டான் - அம்புவிக்கு முத்தெடுத்துக் கோத்து முழுநூலில் தந்திட்டான் நத்துதமிழ்ப் பாவை நயந்து. முத்தெடுக்க மூழ்கி முருகப்பா பட்டதுயர் தித்திக்கும் செந்தமிழே தேர்ந்துணரும் - வைத்திருந்த தஞ்சை மன்னன் ஏடுரைக்கும் தக்கபுல வோர்குழுவின் நெஞ்சுரைக்கும் இவ்வுலகில் நின்று.' குழந்தைகளைப் பற்றிய என் பாடல்கள், பெரும்பாலும் என் குழந்தைகளை மயைப் பொருளாகக் கொண்டவையே யாகும். ஒரு முறை என் மகன் பாரி யென்பவன் தொட்டிலில் துயின்று கொண்டிருந்தான். துயிலும் அழகைப் பார்த்துக் கொண்டே நின்றேன். குழந்தைகளிடம் மிகுந்த ஈடுபாடு கொள்ளும் இயல்பு டையவன் நான். அதனால் நீண்ட நேரம் அக்காட்சியில் ஈடுபட்டிருந் தேன். அவ்வீடுபாடு என் கவிதை யுணர்வைத் தூண்டிவிட்டது. கவிதையும் பிறந்துவிட்டது. " மோனத் துயில்கொள்ளும் போதினிலே - இமை மூடிக் கிடக்கும்கண் மீதினிலே |