| 32 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
தாகவே அறிந்ததில்லை' என எழுதியுள்ளார். எனினும் இசைப் பாடலொன்று பாடும் பொழுது நான் பட்ட வேதனை எனக் கல்லவா தெரியும். ஆடவாராய் என்னோ டாடவாராய் ஆடுமெழில் மாதரசே! - ஆடவாராய் என்ற எடுப்பு வரியை எழுதிவிட்டுத் தொடுப்பு வரியைத் தொடங் கினேன். பாடும்முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே! பைந்தமிழே! என்னுயிரே........ என்ற அளவில் தொடுப்பு நின்றுவிட்டது. 'என்னுயிரே' என்பதற்குப் பின் இரண்டு சீர்கள் அமையாமல் பல நாள் காத்திருந்தேன். தவமிருந்தேன் என்று கூடச் சொல்லலாம். அடிக்கடி அவ் வரியைப் பாடிப் பார்ப்பேன். எத்தனை முறை பாடினாலும் அந்த இரண்டு சீர்கள் வாராமலே மறுத்துவிட்டன. நானும் அம் முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். திடீரென்று ஒருநாள் அந்த வரியைப் பாடினேன். என்னையுமறியாமல் அவ்விரு சீர்களும் தாமே குதித்து வந்தன. சீர்கள் வருவதற்கு முன் வாடினேன். வந்த பின் ஆடினேன். இப்பொழுது படித்துப் பாருங்கள் அந்த வரியை. பாடும் முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே! பைந்தமிழே! என்னுயிரே! பாடியபின் தாமதமேன் - ஆடவாராய் இவ்வாறு வேதனைப்பட வைத்துப் பிறந்த கவிதைக் குழந்தைகள் மிகச் சிலவே. எளிதிற் பிறந்த குழந்தைகள் பலவாம். எனினும் 'இடுப்பு வலி' இல்லாமலா போகும்? |