பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கவிதைகள் முதல் இன்று தோன்றியுள்ள கவிதைகள் வரை நாட்டு விடுதலை, மொழி விடுதலை, சமுதாய விடுதலை என்ற விடுதலை வேட்கைப் பாடல்களாகவே அவை அமைந்து கிடக்கின்ற உண்மை யை வெள்ளிய அறிவினரும் தெள்ளிதின் உணர்வர்.

மூவகைக் கவிதைகள்

மேற்கூறிய விடுதலைப் பாடல்களேயன்றி, வேறு பிற பொருள் பற்றிய பாடல்களும் இந் நூற்றாண்டில் வெளி வந்துள்ளன. ஆயினும் விடுதலைப் பாடல்களே, மக்கள் மன்றத்தில் மிகுதியும் இடம் பெற்றுவிட்டன. காலமும் சூழ்நிலையுமே அந்நிலையை உருவாக்கின எனலாம். அனைத்தையும் ஒன்று கூட்டிக் கருத்து முறையாற் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம். அவையாவன: பழமையைப் பின்பற்றுவன, புதுமையை எதிர்நோக்கிச் செல்வன, பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைவன என்பனவாம். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காணலாம்.

நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் எழுதிய 'மாரிவாயில்' முனைவர் வ.சுப.மாணிக்கம் எழுதிய 'கொடைவிளக்கு' முதலிய நூல்கள் பழைமையைப் பின்பற்றுவன. இவ்வணியில் செகவீர பாண்டியனார், கா.நமச்சிவாய முதலியார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்றவர்தம் கவிதைகள் சேரும். பாரதியார், பாரதிதாசன் முதலியவர்களுடைய கவிதைகள் புதுமை யை நோக்கிச் செல்வன. திரு.வி.கலியாண சுந்தரனார், சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, இராய. சொக்கலிங் கனார், வி.துரைசாமி முதலானோர் கவிதைகள், இருமைக்கும் பாலமாக அமைவன.

இனி மொழிநடை, யாப்பு முறை இவற்றால் நோக்கினும் அக் கவிதைகள் முத்திறத்தனவாகவே பாகுபடும். அருஞ்சொற்கள் ஆர்ந்து யாப்பமைவு நேர்ந்து மரபு வழியில் நிற்பன; ஒரு திறத்தன. எளிய சொற்களை ஏற்று யாப்பமைவு சிறிது மாறி மரபுஞ் சிறிது பிறழ்ந்து வருவன மறு திறத்தன. கொச்சை மொழி குலவி, யாப்பமைவு காணாது, மரபை மறந்து செல்வன மூன்றாந் திறத்தன.

கவிதை நூல் வகைகள்

இனி, இந் நூற்றாண்டில் தோன்றியுள்ள கவிதைகளை நூல் வகையால் நோக்கின் தனிநிலைச் செய்யுள், தொடர்நிலைச்