செய்யுள், நாடகக் காப்பியம், குழந்தை இலக்கியம், இசைப் பாடல்கள் என ஐந்து பிரிவினவாகக் கொள்ளலாம். தனி நிலைச் செய்யுள் என்பது தனித்தனிப் பாடல்களின் தொகுப்பாகும். இத் தொகுப்பு நூல்களே இக் காலத்துப் பல்கி வரக் காண்கின் றோம். தொடர் நிலைச் செய்யுளாகிய காப்பிய நூல்கள், தொகுப்பு நூல்கள் தோன்றும் அளவுக்குத் தோன்றவில்லை. அத்துறை தக்கார்க்கே கைவரப் பெறும் என்பதாற்போலும். காப்பியங்கள் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே, தோன்றி யுள்ளன. பாஞ்சாலி சபதம் (பாரதியார்), பாண்டியன் பரிசு, குறிஞ்சித் திட்டு (பாரதிதாசன்), இராவண காவியம் (புலவர் குழந்தை), சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ.இராம லிங்கம்பிள்ளை), பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), என்றின் னோரன்ன காப்பியங்களே வெளி வந்துள்ளன. இவற்றுள்ளும் கால வெள்ளத்தால் எவை எவை இழுத்துச் செல்லப்படுமோ எவை காலத்தைத் தாண்டி நிற்குமோ? அறியோம். நாடகக் காப்பியங்களைப் பொறுத்தவரையில் இந் நூற்றாண்டில் நாம் ஒன்றுங் கூறவியலா நிலையிற்றான் உள்ளோம். இத்துறையைப் பற்றிக் கவிவாணர்கள் சிந்திப்பதாகத் தோன்ற வில்லை. தனிச் செய்யுளில் ஏற்பட்ட ஆர்வமும், காலம் நீளுமே என்ற அச்சத்தால் தோன்றிய பொறுமையின்மையும் அதற்குக் காரணங்களாக இருக்கக் கூடும். குழந்தைகளுக்காகப் பாடப்படுகின்ற பாடல்கள் நூல் வடிவிற் சில வந்துள்ளன. பேராசிரியர் மயிலை சிவமுத்து, பாவலர் பால சுந்தரம், அழ.வள்ளியப்பா, நாக.முத்தையா, நாரா.நாச்சியப்பன், இரா.இராசகோபாலன், இரா.பொன்னரசன் முதலிய கவிவாணர்கள் குழந்தை இலக்கியங்கள் புனைந்து பெருந்தொண்டாற்றி வருகின்றனர். இத் துறையில் பாரதியார் வெற்றி வீரராகக் காட்சி தருகின்றார். கவிமணி அவரையும் விஞ்சி நிற்கின்றார். இவர்களைப் போன்ற பழுத்த நல்லறிவாளர் இத் துறையில் ஈடுபடுவராயின் நல்லுலகில் நாம் வாழ முடியும். குழந்தையுள்ளம் வளரும் உள்ளம். அவ்வுள்ளம் சீரிய முறையில் மேன்மேலும் வளர்ச்சி பெறக் கவிதைகள் உறுதுணை யாக இருத்தல் வேண்டும். அக்கவிதைகள் நல்ல கருத்துகள், எளிய -இனிய-சிதையாத தமிழ்ச் சொற்கள், அவர்களைப் பண்படுத்தும் நிகழ்ச்சிகள் |