36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
உள்ளடங்கியிருத்தல் வேண்டும். வருங்கால மக்களை உருவாக்கும் ஓர் அரிய கருவியே குழந்தை இலக்கியம். குழந்தை இலக்கியம் இன்னுஞ் சிறந்த முறையில் பயன்தரும் வகையில் வளருதல் வேண்டும் என்னும் ஆசையால் இக்கருத்து வெளியிடப்படுகிறது. கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன், முடியரசன் போன்றோர் இசைப்பாடல்கள் பல புனைந்துள்ளனர். இவை இசைப் பாடலுக்கேற்ற மரபு, வடிவம் உடையன வாக அமைந்துள்ளன. திரைப்படத்துறையில் வரும் இசைப் பாடல்கள் பெரும்பாலும் கவிதைத் தன்மையிழந்து வடிவின்றி மரபின்றி மின்மினிகள் போலப் பளிச்சிட்டு உலா வருகின்றன. பரம்பரை உணர்வு இலக்கியப் பரம்பரையுணர்வு, கவிஞர்களிடத்து மிளிர வேண்டிய இன்றியமையாத ஒரு பண்பாகும். தொன்றுதொட்டு வளர்ந்து வரும் கவிஞர் பரம்பரையில் நானும் ஒருவன் என்ற எண்ணம் இருந்தாற்றான் கவிஞன் சிறப்பெய்த முடியும். முந்தை யரை மதிக்காத கவிஞனும் தந்தையைப் பேணாத தனயனும் ஒரு நிலையினரே. வாழையடி வாழை என வந்த திருக்கூட்டம் என்னும் நினைவு கவிஞனுக்கு வேண்டும். அப் பரம்பரையுணர்வைப் பாரதியாரிடம் பரக்கக் காணலாம். பாரதிதாசனிடம் சிறக்கக் காணலாம். பாரதிதாசன் பரம்பரை யினரிடம் நிரம்பக் காணலாம். "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை" என்ற பாடல் வரிகளால் பாரதியார் முன்னைப் புலவர்களிடத்தில் வைத்திருந்த நன்மதிப்பும் பரம்பரையுணர்வும் தெளிவாக்கப்படு கின்றன. பாரதிதாசன், பாரதிக்குத் தாசன் எனப் பெயர் வைத்துக் கொண்டமை ஒன்றே, அவரிடத்து மிளிரும் பரம்பரையுணர்வை எடுத்துக்காட்டும். மேலும் "திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில கூறுவேன்.........." |