பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கிறான். கண்ட காட்சியால் விளைந்த பேரின்பப் பெருக்கைத் தனக்குள் அடக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை கவிஞனுக்கு; தன்னலம் உடையவனாக அவனால் வாழ முடியவில்லை; வள்ளலா கிறான்; யான் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறட்டுமே என்று வாய்விட்டுக் கூறுகிறான்; நம்மிடம் பேசுகிறான்; அந்தப் பேச்சுதான் கவிதை! கவிதை!! என்று திசையெங்கும் ஒலிக்கிறது.

"முன்னிக் கவிதை வெறிமூண்டே நனவழியப்
      பட்டப் பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம்
      நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே"

என்ற பாரதியாரின் கவிக்கனவை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். நனவையிழந்த கனவுதான் பாவலன் காணும் கனவு. விழிப்பு நிலையாயினும் நனவு அழிந்துவிடுகிறது. அஃதாவது தன்னை மறந்துவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்பது கருத்து. அப்பொழுது தான் கவிதை வெறி மூண்டெழும்.

ஊடுருவும் கண்கள்

இவ்வாறு தன்னை மறந்த நிலை - பொருளோடு ஒன்றும் நிலை எப்பொழுது, எப்பொருளைக் காணும்பொழுது ஏற்படு கிறது? எந்தப் பொழுதிலும் எப்பொருளைக் காணினும் கவிஞன் மட்டும் அந்நிலையைப் பெற்று விடுகின்றான். நிலவைக் காணினும் இருளைக் காணினும், மயிலைக் காணினும், காகத்தைக் காணினும், குழவி, கிழவர், மருதம், பாலை எப்பொருளைக் காணினும் கவிஞனுக்கு அந் நிலை தானாகவே உண்டாகி விடுகிறது. கவிஞன் கண்களுக்கும் மற்றையோர் கண்களுக்கும் உள்ள வேறுபாடு அதுதான். அந்தக் கண்களுக்கு ஒரு தனி ஆற்றல் இருக்கத்தான் செய்கின்றது. எப்பொருளையும் ஊடுருவிச் சென்று அதனுள் அமைந்து கிடக்கும் அழகியவையெல்லாம் கண்டு கண்டு கழிபேரு வகை கொள்ளும் ஆற்றல் பெற்றவை அக்கண்கள். கட்புலனாகாப் பண்புகளிலும் அப்படியேதான். அக்கட்புலனா காப் பண்புகளுள் காதல், அன்பு என்ற இன்னோரன்ன பொருள் களிலேதான் உலகினர் உள்ளம் படியும் - சுவைக்கும். ஆனால், கவிஞன் உள்ளமோ அவ்வாறன்று. அன்பு, கொடுமை, காதல், அவலம், வெகுளி, உவகை-எப்பொருளாயினும் சரி அதனுள் படியும்; அதனைச் சுவைக்கும்; மற்றவரையும் சுவைக்கச் செய்யும். இத்தகு ஆற்றல்