பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்109

19
எங்கள் அருமை ஐயா

டாக்டர் மா. மணிமேகலை, மருந்தியல் துறைத்தலைவர்

(மகள் வழிப் பேர்த்தி மருத்துவர் மணி மேகலை, பெரும் பாலும் சண்முகனாரிடம் வளர்ந்தவர். சண்முகனாரின் வாழ்க்கையில் நாடி நரம்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.)

நான் கைப்பிள்ளையாக இருந்த பருவத்திலிருந்து, இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்து இரங்கூனிலிருந்து என் பெற்றோர் திரும்பும் வரை என் அருமை ஐயா அவர்களால் வளர்க்கப் பட்டேன். பெற்றோர் திரும்பிய பின்னரும், கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஐயா அவர்களிடமே சென்று விடுவ துண்டு. எப்படியும் எட்டு முதல் பத்துப் பிள்ளைகள் வரை ஐயா அவர்கள் நேர்முகக் கண்காணிப்பில் வளர்ந்து வந்தோம்.

குழந்தைகளிடம் ஐயா அவர்கள் காட்டிய அன்பும், பாசமும், ஒழுங்குமுறைப் பயிற்சியும் வார்த்தைகளின் வரம் பிற்கு அப்பாற் பட்டவை. அவற்றை இன்று நினைக்கும் போதும் கண்கள் கலங்கும். எங்களுக்கு நொண்டி விளை யாடுவது, ஸ்கிப்பிங் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, கண்ணாமூச்சி விளையாடுவது, நிலாக்காலங் களில் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று உருண்டைச் சோறு அளிப்பது, பயனுள்ள - நாட்டுப் பற்று, வீரம் நிறைந்த கதைகள் - நிகழ்ச்சிகள் கூறுவது, இவையனைத்தும் என்முன் நிழலாடு கின்றன. குழந்தைகள் அனைவருக்கும் ஐயா அவர்கள் அளித்த கட்டுக்கோப் பான ஒழுங்கு நெறிகள் இன்றும் என்றும் எங்களுக்குத் தோன்றாத் துணையாகவுள்ளன.

பிள்ளைகளுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டால் ஐயா அவர்கள் சண்டைக்குக் காரணமானவரைக் கூப்பிட்டு, ஒரு குண்டூசி கொண்டு வரச் செய்து, அதைத் தமது கையில் சதையில் குத்தி எடுக்கச் சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் கவலையாகவும் வேதனை யாகவும் இருக்கும். எங்கள் அருமை ஐயா அவர்கள் வேதனை