110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
யாகச் சிரித்தபடி சொல் வார்கள். "இந்த ஊசி குத்தியது எனக்கு வலியில்லை. நீங்கள் சண்டை போடுவதுதான் வலிக்கிறது" என் பார்கள். குழந்தை களிடையே மறுபடி சண்டைப் பிரச்சினை வராது. தனிப்பட்ட முறையில் பிள்ளைகள் தவறு செய்தால், அந்தப் பிள்ளை முன் பிரம்பால் தம்மை அடித்துக் கொள்வார்கள். 'உங்களைச் சரியாக வளர்க்காமல் விட்ட தவறுக்கு எனக்குத் தண்டனை' என்பார்கள். பிள்ளைகளை வளர்க்கும் விதம், அபரிமித மான பாசம், அப்பழுக்கற்ற அன்பு, மனோதிடம் இவை யாவும் எவரையும் எங்கள் ஐயா பால் ஈர்க்கக்கூடியன. காலையில் விரைவில் எழுந்திருத்தல், அளவுடன் பகலுணவு கொள்ளுதல், சாப்பிடும் முன் பாரதியார் பாடல்கள், பாரதி தாசனார் பாடல்கள் பாடும் ஒழுங்கு முறைகள் எங்களுக்கு இளம் வயதிலேயே ஐயா அவர்களால் வித்திடப்பட்டவை. பலதரப்பட்ட மக்கள், பலதரப்பட்ட குடும்பத்தினர் உற்றார், உறவினர் இவர்களிடையே குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் இவைகளில் பாதிக்கப் பட்டவர், ஐயா அவர்களின் உதவியை நாடுவதும் வீட்டில் பஞ்சாயத்து செய்து, பிரச்சினைகளை சுமூகமாக ஆனால் ஆணித்தரமாகத் தீர்த்து வைப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாக நடக்கும். ஐயா அவர்களின் மன உறுதி, விவேகம், உண்மைக்குப் போராடும் மன வலிமை எவரையும் அயர வைக்கும். இதை எண்ணற்ற நிகழ்ச்சி களில் கண்டுள்ளேன். மூட நம்பிக்கை ஐயா அவர்கட்கு ஒத்து வராத ஒன்று. அதை எதிர்க்க, ஒழிக்க ஐயா அவர்கள் எடுத்த முயற்சிகள், சமாளித்த எதிர்ப்புகள் ஏராளம். ஐயா அவர்கள் பள்ளியில் நான் கற்றவை, உணர்ந்தவைதான் எனது பள்ளிப் படிப்பு, கல்லூரி உயர் கல்விப் படிப்பு, எனது பலதரப்பட்ட பணிகள் அனைத்திற்கும் ஆழமான அடித்தளமாக அமைந்தன. ஐயா அவர்களின் கூர்மையான புத்தி, புத்திசாலிகளையே தூக்கி விழுங்கக்கூடியது. மோசடி பண்ணியவர்களை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை, போலிப்ப கட்டு வரட்டு கவுரவம் பார்ப்பவர்களை, எந்த விதமான தவறு செய்பவர்களையும் நேரடியாக அவர்கள் உணரும் வண்ணம் தவற்றைச் சுட்டிக் காட்டுவார்கள். இதனால் ஐயா அவர்கள் பலரது வெறுப்பினையும் பகையினையும் தேடிக் கொள்ள நேர்ந்தது. அதற்காக ஐயா அவர்கள் என்றும் மனந்தளர்ந்ததே கிடையாது. நேர்மைக்காகவும், |