112 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
தாரமிழந்த கணவருக்கும், தாலி இழந்த மங்கைக்கும் திருமணம் என மறுமணம் செய்து காட்டிய புரட்சியை எண்ணிப் பார்க்கிறேன். எந்த எதிர்ப்பிற்கும் அஞ்சாத நெஞ்சம் அந்த உயர்ந்த நெஞ்சம். எடுத்த இல்ட்சியம் கொள்கை தான் முடிவு. அந்தஇலக்கை அடையும் வரை ஐயா அவர்கள் அயர்ந்ததே இல்லை. அதற்காக ஐயா அவர்கள் உடல் அளவில் பொருள் அளவில் பட்டபாட்டை நான் நன்கு அறிவேன். என்னுடைய வாழ்க்கையில் சோதனைகள் வேதனைகள் வரும் போது ஐயா அவர்களை, திடமும் வலிமையும் அளிக்க மானசீக மாக வேண்டுவது என் அன்றாட நிகழ்ச்சி, தைரிய இலட்சுமியின் முழு உருவாக ஐயா அவர்களை - அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையை வைத்துக் கருதிப் போற்றி வணங்குகிறேன். ஐயா அவர்களிடம் மற்றவர் நம்மை துன்புறுத்துவதாக வருந்திக் கூறினால் "நாய் நம்மைக் கடித்தால் நாயை நாம் திருப்பியா கடிப்பது? நாம் விலகிச் செல்ல வேண்டும்" என்பார்கள். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், நெளிவு சுழிவு களில் மாட்டும் போது ஐயா அவர்கள் கூறிய நெறிமுறைகள் எனக்கு விவேகத்தை அளிக்கும். இன்னொரு நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஐயா அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. ஐயா அவர்கள் கேட்டுக் கொண்டபடி மயக்க மருந்தின்றி விட்டிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. ஐயா அவர்களின் மனவலிமைக் கண்டு டாக்டரே அயர்ந்து போனார். அந்தக் காலத்தில் இரண்டுமுறை வாதம், பேச்சின்மை வந்த போது, ஐயா அவர்கள் தியானப் பயிற்சியினாலும் அளவற்ற மன வலுவினாலும், இரத்தக்குழாய் அடைப்பு விலகி, பூரண நலம் பெற்றார்கள். நான் படித்த மருத்துவத் துறைக்கு, ஐயா அவர்கள் சவாலாக விளங்கினார்கள். கட்டுப் பாடான உணவு முறை களிலும் சித்த வைத்தியத் துறையிலும் நிறைந்த ஈடுபாடு காண்பிப்பார்கள். எப்படிப்பட்ட கஷாயமானாலும் கடும் கசப்பாக இருந்தாலும் ஐயா அவர்கள் சிரித்த முகத்துடன் சாப்பிடும் காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது. மூலிகை மருந்துகள், புதிய முறைகட்குத் தம்மையே பரிசோ தனைக்கு மனமுவந்து உட்படுத்திக் கொள்வார்கள். நான் இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, சிறு விடுமுறையில் ஐயா அவர்களைப் பார்க்கப் போன போது புதிய மூலிகை மருந்தினை உட்கொண்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந் தார்கள். அந்த நிலையில் "நீ படிப்பதுடன் நில்லாது, மூலிகை |