பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

இப்பொழுது அக்குறிப்புகள் இருக்கும் இடம் தெரிய வில்லை. அவை கிடைத்திருந்தால் தமிழ்நாட்டில் - குறிப்பாகச் செட்டி நாட்டில் காங்கிரசு பரவியது. அதற்காக அவர்கள் ஆற்றிய பணிகள், சுயமரியாதை இயக்கத்தினால் செட்டிநாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் எல்லாம் சான்றுகளுடன் நமக்குக் கிடைத்திருக்கும். அவை கிடைக்காத காரணத்தினால் அவர்கள் ஆற்றிய பணிகளை முழுமையாக நாம் அறிந்து கொள்ள முடிய வில்லை. பெரு மதிப்பிற்குரிய தம்பி முடியரசன் அவர்கள் அதிக முயற்சியும் அக்கறையும் எடுத்துச் சான்றுகள் பலவற்றைத் தேடித் தொகுத்து உள்ளார்.

காந்தியடிகள் தொடர்பு

மகாத்மா காந்தியடிகள் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த பொழுது, செட்டி நாட்டுப் பகுதியில் சுற்றுப்பயணம் வைத் திருந்த பொழுது 1927 ம் ஆண்டு கானாடுகாத்தானில் தந்தை யாரவர்களின் "இன்ப மாளிகை" என்ற வீட்டில் தான் தங்கி இருந்தார்கள். அவர்களுடன் மூதறிஞர் இராஜாஜி, புலாபாய் தேசாய், அன்னை கஸ்தூரிபாய், தேவதாஸ் காந்தி மற்றும் பல பெரியோர்களும் தொண்டர்களும் அங்குதான் தங்கி இருந்தார்கள். அந்த 2,3 நாள்களும் தினசரி பலநூறு பேர் களுக்குச் சாப்பாடு அங்கேதான். செட்டு சமையல் காரர்கள் சமையல். அப்பொழுது ஒரு நாள் காந்தியடிகள் தந்தையார வர்களிடம் "உங்களைப் போன்றவர்களின் சேவைதான் நாட்டுக்கு மிகத் தேவை. இன்னும் தீவிரமாகச் செயல்பட நீங்கள் வந்துவிட வேண்டும்" என்று கூறினார்களாம். "ஒரு வழக்கு நடைபெறுகிறது. நான் போட்ட (ஆரம்பித்த) வழக்கை முடித்து விட்டு வந்து விடுகிறேன்" என்று தந்தையார வர்கள் பதில் கூறினார்களாம். அதற்கு காந்தியடிகள் இதிலிருந்து நீங்கள் வெளியேறிவிட வேண்டும். என்று வருத்தமுடன் ஆழமான பார்வையில் பார்த்துப் பதில் கூறினார் களாம்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் (சூரத்தில் என்று தந்தையார் கூறிய நினைவு) நடந்ததாம். அது குழப்பத்தில் முடிந்ததாம். பிரச்சினையில், அணுகுமுறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் திலகர் கோஷ்டி கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டதாம். அப்படி வெளியேறியவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தியாகச் சுடர்களான, திரு. வ.உ. சிதம்பரனார்,