பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

2
மறுமணம்

கானாடுகாத்தானில், அரண்மனை போன்ற ஒரு பெரிய வள மனைக்கு உரியவராக, அரசவாழ்வு வாழ்ந்து கொண்டிருந் தார் சண்முகனார்.

அம்மாளிகைக்கு 'இன்ப மாளிகை' என்று பெயர். பெயருக் கேற்ப இன்பந்தரும் மாளிகையாக மட்டுமின்றி, அன்பு தவழும் மாளிகையாகவும் அது நிலை பெற்றிருந்தது.

அதன் நடுவே நீண்டு, உயர்ந்த பெரிய கூடமொன்று உண்டு. அக்கூடத்தின் சுவரில் எதிர் எதிராக மிகப்பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும்.

அக்கண்ணாடிக் கெதிரில் விரிந்து நீண்ட, பெரிய ஊஞ்ச லொன்று தொங்கும். கூடத்தின் மேற்பரப்பு, அருமையான வருண வேலைப்பாடுகளால் ஒப்பனை செய்யப்பட்டிருக்கும்.

வழுவழுப்பும் பளபளப்பும் நிறைந்த பத்திகள், பளிங்குக் கற்களா லான தரைகள், ஒளி விடும் கருங்கற்றூண்கள் அம்மாளிகையின் எழிலை மிகுதியாக்கிக் காட்டும், சுருங்கக் கூறின், அஃது ஒரு கொலு மண்டபம் போலக் காட்சி நல்கும். இதற்குக் கலியாண மண்டபம் எனப் பெயர் வைத்திருந்தனர். இது பொதுத் தொண்டர் பலர்க்கும் புகலிடமாக விளங்கியது.

தஞ்சை மராட்டியர் குடும்பத்தினரைச் சேர்ந்த மஞ்சுளா பாய் என்னும் அம்மையார், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுத் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராகி விட்டார். தனித்து உழன்று கொண்டிருந்த அம்மையாருக்கு இப்பொதுத் தொண்டு ஆறுதலாக இருந்தது.

பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் அம்மையாரும் உடன் செல்வது வழக்கம். பெரியார் தென்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால், கானாடுகாத்தான் இன்ப மாளிகையில் தங்குவது