வெள்ளையர் ஆட்சிக்கு அஞ்சிய செட்டிநாட்டுச் செல்வர் சிலர், காந்தியடிகள் வருகைக்குத் தடையாக இருந்தனர். அடிகளை வரவேற்கவும் கூடாது என்று ஆணைகளையும் அறிவித்து விட்டனர். சண்முகனார், அந்த ஆணைகட்கு மருளாது, அஞ்சாது நின்று, தடைகளை உடைத்தெறிந்து, செட்டி நாட்டில் வரவேற் பளித்தார். கானாடுகாத்தானில் தமது இன்ப மாளிகைக்குக் காந்தியடிகளை அழைத்து வந்து தங்க வைத்து, வேண்டியன செய்து மகிழ்ந்தார். செட்டிநாட்டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு 'கெஜம்' அளவுள்ள, தாமே நூற்ற கதர்த்துணியை காந்தியடிகள் ஏலம் விட்டார். வயி.சு. சண்முகனார் உரூபா ஆயிரத்தொன்று கொடுத்து, அத்துணியை வாங்கினார். '... தேவகோட்டைக்குக் காந்தியடிகள் வருகை தந்த போது, அவருக்களிக்கப்பட்ட மிகவும் சிறந்த கதர்த்துணியை ஏலத்தில் விட்டாராம். அதைக் கானாடுகாத்தான் திரு. வை.சு.சண்முகம் செட்டியார் 1001 ரூபாய்க்கு எடுத்தார். அதனைப் பொன்னெனப் போற்றி வந்து, இப்பொழுது மக்கள் காண, மியூசியத்திற்கு அளித்துள்ளார்.' - சி.என். கிருஷ்ண பாரதி 'ஆனந்த விகடன்' 5.10.69 (கதர்த்துணி காந்தியடிகள் தாமே நூற்றதென்றும், ஏலம் விடப் பட்ட இடம் காரைக்குடியில் மகார்நோன்பு பொட்டல், (தற்பொழுது காந்தி சதுக்கம் என்ற இடம்) என்றும் வயி.சு.ச. மகளார் பார்வதி நடராசன் அவர் வீட்டார் மூலம் அறிந்த தாகக் கூறுகிறார்) சுயமரியாதை இயக்கப் பொருளாளர் தந்தை பெரியார் பேராயக் கட்சியிலிருந்து விலகிப் புயல் வேகத்திற் சுற்றுப் பயணம் செய்து, சுயமரியாதைக் கொள்கை களைத் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். அக்கொள்கைகளில் செவியேற்ற சண்முகனார்க்கு அவற்றில் நம்பிக்கை பிறந்தது. அக்கொள்கைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அக்கொள்கைகள் செட்டிநாட்டிற் பரவப் பெரிதும் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் பொருளாளராகவும் செயற்பட்டு வந்தார். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள், கொள்கை பரப்பும் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் |