| 32 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
பாவேந்தரிடம் இடையறாப் பற்றுடைய நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாரிடம் உசாவிப் பார்ப்போம். இத்திருமணங் குறித்து என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்வதும் நல்லது தானே? "நான் சென்ற முறை கானாடுகாத்தான் சென்றிருந்த போது, பாவேந்தரின் மூத்த மகளான சரசுவதியின் திருமணம் பற்றிப்பேச்சு நடந்தது. திரு.வை.சு. சண்முகம் செட்டியாரும் அவர் மனைவி மஞ்சுளாபாய் அம்மையாரும் சரசுவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் தீவிரமாக இருந்தனர். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்த புலவர். கண்ணப்பன் அவர்களே அந்த வரன். திருப்பூர் திராவிடர் கழகத் தோழரும் புரவலருமான திரு. எஸ்.ஆர். சுப்பிரமணியம் வீட்டில் புலவர். கண்ணப்பனும் மஞ்சுளாபாயும் எதிர்பாராமல் சந்தித்துப் பேசியபோது இந்தத் திருமணப் பேச்சுத் துவங்கியது. பிறகு வை. சு. சண்முகம் தம்பதியர் இத்திருமண முயற்சியில் முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். இவ்வாறு செல்லப்ப ரெட்டியார், 'அரும்புகள், மொட்டுகள், மலர்கள்' என்ற நூலிற் குறிப்பிடுகின்றார். இறுதியாக, சரசுவதி, கண்ணப்பர் திருமண அழைப் பிதழை நோக்கினால் பாவேந்தர் குடும்பத்துக்கும் வயி. சு. சண்முகனாரின் குடும்பத்துக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு இருந்தது என்பது புலனாகும். இதோ அழைப்பிதழ்:" திருமணம் நிகழ் 1944-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 23-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9-மணிக்குச் சேலம் உயர்நிலைப் பள்ளி பிரின்ஸிபால் உயர்திரு. அ. இராமசாமிக்கவுண்டர் எம்.ஏ., எல்.,டி., அவர்கள் தலைமையில் புதுவை கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) மகள் சரசுவதியும் கரூர் தாலுக்கா, கட்டிப்பாளையம், தி.க. ஆறுமுக முதலியார் மகன் வித்துவான் கண்ணப்பனும் கட்டிப்பாளையம் மணமகன் இல்லத்தில் திருமணம் புரிந்து கொள்வதில் தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து சிறப்புறு விக்க வேண்டுகின்றோம். ஈ.வே. ராமசாமி, மஞ்சுளாபாய் வை. சு. |