பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்33

தங்கள் வருகையை எதிர்நோக்கும்

வை.சு. சண்முகம்,கானாடுகாத்தான்,
அ.பழ பழனியப்ப செட்டியார்,ஆவினிப்பட்டி,

மு. இராமசாமி செட்டியார்கோனாபட்டு,

கனக. சுப்புரத்தினம்(பாரதிதாசன்)

ந.கிருஷ்ணராஜு,போடிநாயக்கன் பட்டி,

முத்துசாமி முதலியார்,கட்டிப்பாளையம்,

பி. சண்முகவேலாயுதன்,ஈரோடு,

தி.க. சின்னுமுதலியார்,கட்டிப்பாளையம்

(இவ்வழைப்பு, கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலில் வெளி யாகியுள்ளது - ஆ-ர்.)

தோழர் சீவானந்தம் தொடர்பு

பொதுவுடைமைக் கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவராக விளங்கிய தோழர். ப. சீவானந்தம் மேடை தோறும் அரியே றென முழங்கிவிட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அடிக்கடி இன்பமாளி கைக்கு வருவதுண்டு.

அவர் வரும்பொழுது, அயலவர் போலவோ விருந்தினர் போலவோ வரவேற்கப்படுவதில்லை. அவ்வீட்டிற்கு உரியவர் போலவே வரவேற்கப்படுவார்.

அவர் இன்பமாளிகையில் தங்கியிருக்கும் பொழுது வேண்டிய அனைத்தும் செய்து தரப்படும். அவர் ஆடம்பர வாழ்வு வாழ்பவரல்லர். எனினும் நாட்டிற்காகத் தம்மையே ஈடுபடுத்திக் கொண்ட தலைவ ராயிற்றே, அவரை நன்கு பேணிக்காக்க வேண்டி, அவரைக் கண்ணுங்கருத்துமாகக் கவனித்து வருவார் சண்முகனார்.

இங்கே சீவா தங்கியிருக்கும் பொழுது கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தாக வேண்டும். இல்லை யென்றால் சண்முகனார் விடமாட்டார். வற்புறுத்தி எண்ணெய் நீராடும் படி செய்து விடுவார். உணவு வகைகளும் ஏற்ற வகையில் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துச் சமைக்கச் சொல்லுவார்.

சீவாவுக்கு அறிவுரைகளும் கூறுவார். நீங்கள் நெடுநாள் உயிர் வாழ வேண்டும்; தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும். அதனால் உரத்துப் பேசுவதைச் சற்றே குறைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறுவார்.