பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்37

5
விருந்தோம்பல்

உண்மைத் தணிகாசலம்

பல ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் ஒன்று வெளி வந்தது. அப்படத்தில் எஸ்.வீ. ரங்காராவ் என்ற நடிகர் 'தணிகாசலம்' என்ற உறுப்பினராக நடித்தார். அருமையான நடிப்பு!

இவர் இல்லத்திற்கோ ஊருக்கோ எவரேனும் வந்து விடின், அவ்வில்லத்திற் கட்டாயம் உண்ணுதல் வேண்டும். உண்ணா விடில் விடார். அத்தகு தாராள மனமுடையவர். பிறர் எவராகினும் அவர்க்கு விருந்து படைப்பதிலே 'தணிகாசல'த் துக்குத் தணியாத இன்பம்.

ஒரு நாள் புதியரொருவர், இவருடைய இல்லத்திற்கு வந்திருந்தார். அவரை உண்ணுமாறு அழைத்தார். வந்தவரோ மறுத்துரைத்தார். தணிகாசலம் வெகுளத் தொடங்கி விட்டார். "எக்ஸ் ஜில்லா போர்டு மெம்பர், மாஜி பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட், எஸ்.கே. தணிகாசலம் என்றால் இந்த ஊருக்கே தெரியுமே. இங்கே வந்துவிட்டு நம்ம வீட்டிலே சாப்பிடாமற் போறதாவது? (பணி யாளரை நோக்கி) டே! கதவைச் சாத்து, ஐயா சாப்பிட்ட பிறகு வெளியில் விடு" என்று ஆணையிட்டார்.

இது திரைப்பட நிகழ்ச்சி, ஆகினும் இத்தகு மாந்தர் உண்மை வாழ்க்கையிலும் அங்கங்கே இருத்தலையும் காண்கிறோம். திரைப்படத்திலே 'தணிகாசலம்' கானாடு காத்தானிலே சண் முகனார், இன்ப மாளிகைக்குச் சென்று வந்தோர் அறிவர் அங்கு விருந்தோம்பும் முறைகளை. அவர்தம் உளப்பாங்கறிந்து மஞ்சுளா அம்மையாரும் அவ்வாறே அன்பின் சின்னமாக நின்று விருந்து படைப்பார்.

தாயும் தந்தையும் தம்பிள்ளைகளை எவ்வாறு வற்புறுத்தி வற்புறுத்தி, ஊட்டியூட்டி. உண்ணச் செய்வரோ அவ்வாறே 'இது