பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்39

பாரதிதாசன் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுக் கானாடு காத்தானுக்கு வருமுன், 'கானாடுகாத்தானுக்கு வந்து என்னைச் சந்திக்க' என்று பலர்க்கும் மடல் எழுதி விடுவார். அனைவரும் வந்து சேர்வர். வந்தோர் அனைவர்க்கும் இங்கேதான் விருந்து!

சான்றுகள்

'குயில் கூவிக்கொண்டிருக்கும்' என்ற நூலில் மதுரைத் தனுக் கோடி ராசு என்பார் கீழ்வருமாறு எழுதுகிறார்.

'பாவேந்தர் ஒரு முறை செட்டிநாடு வந்தபோது, கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் வீட்டிற்கு வரும்படி எனக்குக் (தனுக்கோடிராசு) கடிதம் எழுதியிருந்தார். வை.சு. சண்முகஞ் செட்டியார் கானாடுகாத்தானின் குறிப்பிடத்தக்க பெருஞ்செல்வர்களில் ஒருவர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்று பாவேந்தரைப் பார்த்தேன். அதன் பிறகு பாவேந்தர் தெற்கு மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் எனக்குக் கடிதம் எழுதுவார். நான் சென்று அவரோடு இருப்பது வழக்கம். என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டார்.

இனி, மஞ்சுளாபாய் அம்மையார், 'குயில் கூவிக் கொண் டிருக்கும்' என்னும் அதே நூலிற் குறிப்பிடும் செய்திகளைக் காண்போம்.

"நீதிக் கட்சித் தேர்தல் பிரசாரம் முடிந்து பெரியார் ஈ.வெ.ரா. கொடைக்கானலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தார். நானும் (மஞ்சுளாபாய்) பூவாளுர் பொன்னம் பலனாரும், வேறு சில இயக்கத் தொண்டர்களும் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம்." (இஃது அம்மையார் திருமணத்துக்கு முன்)

வை.சு.ச. சுயமரியாதை இயக்கத்தின் பொருளாளர். சுய மரியாதைத் தொண்டர்கள் தெற்கு மாவட்டங்களுக்குப் பிரசாரத்து க்குப் போனால் கானாடு காத்தான் இன்ப மாளிகையில் தான் பொதுவாகத் தங்குவது வழக்கம். அதுதான் அப்போது எங்கள் தெற்குக் கேந்திரம். (இதுவும் திருமணத்துக்கு முன்)

"சுயமரியாதை இயக்கத்தின் இதயக்குரலாக, சங்க நாதமாக விளங்கிய பாவேந்தர் தொடர்பு எங்கள் குடும்பத்துக்கு இன்றி யமையாததாகி விட்டது. தென் தமிழ் நாட்டுக்கு வந்தால் இன்ப