40 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
மாளிகையே அந்தப் புதுவைச் சிறுத்தையின் பாசறையாக விளங்கும். ஆசான் பாரதி அமர்ந்திருந்த எங்கள் கூடத்து ஊஞ்சல் அவர் மாணவரையும் தாலாட்டியது. எப்போது வந்தாலும் சில நாள்கள் இன்ப மாளிகையில் தங்கியிருந்து ஓய்வு பெற்றுச் செல்வார். செட்டிநாட்டு இளைஞர் பட்டாளம் தேனீக்களாக அப்புதுவைத் தேனடை யைச் சூழ்ந்து கொள்ளும்" (இது திருமணத்துக்குப் பின் எழுதியது) செல்வச் செழிப்புடன் வாழ்ந்த காலத்தில் சிறந்த முறையில் விருந்தோம்புவது உலகோர் இயல்பு. ஆனால் முட்டுப்பாடுற்ற காலத்தில் முகங்கோணாது, விருந்தோம்புவது தான் தலைசிறந்த பண்பாகும். வருந்தும் நிலையிலும் விருந் தோம்பும் அருளாண்மை இவர்பாலுண்டு. அதனை அம்மையாரே கூறுகின்றார். "எங்கள் குடும்பம் கானாடுகாத்தானிலிருந்து, குடிபெயர்ந்து, திருவானைக்காவலில் கொஞ்ச நாள் தங்கியது. அப்போது பாவேந்தர், குடும்பத்தோடு வந்திருந்து, எங்களுடன் தங்கி யிருந்தார். கண்ணப் பரும் சரசுவதியும் வந்திருந்தனர்." - 'குயில் கூவிக் கொண்டிருக்கும்' முருகு சுந்தரம் இனி நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியார் என்பவர், முருகு சுந்தரம் தொகுத்த 'அரும்புகள், மொட்டுகள், மலர்கள்' என்னும் நூலிற் குறிப்பிடுவதாவது: "கானாடுகாத்தானுக்குப் புறப்பட்டு வரும்படி கவிஞரிட மிருந்து (பாரதிதாசன்) எனக்கோர் அவசரக் கடிதம் வந்தது. கானாடு காத்தான் தனவணிகர் திரு. வை.சு. சண்முகம் அவர் மனைவியார் திருமதி மஞ்சளாபாயும் பாவேந்தருக்கு மிகவும் வேண்டியவர்கள். வை.சு. சண்முகஞ் செட்டியார் அப்போது செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் வீடான 'இன்ப மாளிகை'க்கு நான் சென்றேன். பாவேந்தரும் எனக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தார்கள்... ஒரு திங்கள் கழித்து நானும் பாவேந்தரும் மீண்டும் கானாடுகாத்தான் சென்றோம்." இவ்வாறு 'இன்பமாளிகை' எப்பொழுது பார்த்தாலும் விருந்து! விருந்து! விருந்து மயமாகவே கலகலப்புடன் காணப்படும். காந்தி, பெரியார், பாரதி, பாரதிதாசன் போன்ற தலைசிறந்த பெருமக்கள் விருந்துண்ட இன்பமாளிகையில் நானும் விருந்தின |