42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
சிலவற்றை ஏற்றுக் கொண்டார். சிலவற்றை ஏற்காது உரத்து வாதாடினார். அவர்அமைதியாக இருக்கும் பொழுது நாம் எடுத்துச் சொன்னால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். அவர் மனத் திற்குச் சரியென்று படுதல் வேண்டும். சரியெனப் படும் வரை விடார். பாரதியும் பாரதிதாசனும் ஏறி இறங்கி வந்த படிகளில், சண்முக னார் வாழ்ந்து கொண்டிருந்த இன்பமாளிகைப் படிகளில் நானும் பலமுறை ஏறி இறங்கியிருக்கிறேன். அவர்கள் ஒதுங்கியிருந்த ஓட்டுக் குடிலுக்குள்ளும் புகுந்து வந்துள்ளேன். |