கடையத்திற் பாரதியாரைக் கண்டு மகிழ்ந்த சண்முகனார், அவரைக் கானாடுகாத்தானுக்கு வருமாறு அழைத்தார். 'வருவோம்' என்று மறுமொழி கூறினார். சண்முகனார், கானாடுகாத்தானுக்கு வந்த பின்னரும், வருக வருகவெனப் பல மடல்கள் பாரதியாருக்கு எழுதினார். பாரதியார் வருகை அதனை யேற்றுக் கொண்ட பாரதியார், 28-10-1919 ஆம் ஆண்டு காலை 10.30 மணிக்குக் காரைக்குடிப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கினார். அங்கே அவரை அன்புடன் வரவேற்று மகிழ்ந்த இளைஞர் களுடன் அளவளாவிக் களித்துப் பகல் உணவுக்குப் பின் மாலையில் கானாடுகாத்தானுக்கு வந்து சேர்ந்தார். சண்முகனார் அகமும் முகமும் மலர வரவேற்று, அவர்க்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தந்து பேணி வந்தார். வறுமையில் உழன்று கொண்டிருந்த பாரதியின் நிலைமைக் கிரங்கிய சண்முகனார், குடும்பத்துடன் பாரதியைத் தம் இல்லத்தி லேயே வைத்துப் புரக்க எண்ணி, 'இங்கேயே வந்து விடுங்கள் ஒரு குறையுமின்றிக் கவனித்துக் கொள்கிறேன்!' என்று கூறினார். 'வேண்டியவை அனைத்தும் செய்து தருகிறேன். இந்த அறையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்; நான் இந்த அறையை வைத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு இந்த அலமாரி; எனக்கு இந்த அலமாரி. இந்த மேசை உங்களுக்கு; இது எனக்கு' என்று பாகப்பிரி வினை செய்வது போல் பங்கு போட்டுக் காட்டி வேண்டினார். தக்க புரவலர் கிடைத்தார் எனக் கருதிய பாரதியாரும் தங்கு வதென முடிவு செய்து. கடையத்திலிருந்த தம் மனைவியாரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். அம்மையார் வர இசைய வில்லை. மனைவியாரை அங்கே தனித்திருக்க விட்டு விட்டுத் தாம் மட்டும் இங்கேயிருக்க விரும்பவில்லை பாரதி யார். சில நாள் மட்டும் தங்கியிருந்து விட்டுக் கடையத்துக்குப் புறப்பட்டு விட்டார். வீறுபெறும் பாவலன் சோறு பெறத் துயருறுவதா? என நெஞ் சுருகிய சண்முகனார், அக்காலத்தே திங்கள் தோறும் நாற்பது உரூவா தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். இக்காலத்தே உண்மைப் பாவலர்தம் நிலையறிந்து, தர முணர்ந்து உதவுவார் |