பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

சிலரேனும் இருந்தாலன்றோ உயரிய இலக்கியங்களைத் தமிழ்நாடு பெற முடியும்? சங்க காலத்துப் புலவர்களை அக்காலத்து வேந்தர்கள் புரந்து வந்தமையாலன்றோ சங்க இலக்கியக் கருவூலங்களை நாம் பெற முடிந்தது!

புலமைக் கடலுள் மூழ்கிய சான்றோர், பாட்டு முத்துகளைத் தேடுவரே அன்றி வெறும் பணங் காசுகளைத் தேடியலைய விழையார். அதனால் முத்தெடுக்க மூழ்கி உழலும் பாவலர்க்குக் கை கொடுத்துக் காக்க வேண்டுவது நாட்டு மக்களுடைய கடமை யாகும்.

பாரதியின் விளையாட்டு

நாடகத் துறையில் தனிக்கொடி நாட்டிய அவ்வை தி.க. சண்முகம் அவர்கள், காரைக்குடியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த சமயம், பாவேந்தர் பாரதிதாசன் கானாடு காத்தானில் இருக்கும் செய்தி யறிந்து, அவரைக் காணக் கானாடுகாத்தானுக்குச் சென்றார். அப்பொழுது சண்முகனார், கவிஞர்கள் இயல்பை எடுத்துக் கூறி, அவர்களிடம் எச்சரிக்கை யாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அந்தச் சண்முகனார் கூறிய அறிவுரையை இந்தச் சண்முகம் 'எனது நாடக வாழ்க்கை' என்ற நூலில் விவரிக்கிறார். பாருங்கள்:

"காரைக்குடியில் இருந்த போது புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் கானாடு காத்தான் வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. கவிஞரை நேரில் காணவும் 'பில்கணன்' சம்பந்தமான அனுமதி யைப் பெறவும் எண்ணிக் கானாடு காத்தான் சென்றேன். எங்கள் நண்பர் திரு. வை.சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் இருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். செட்டியார் அவர் களைப் பார்த்தேன். செய்தி களை விவரமாகச் சொன்னேன். வை.சு.ச. அவர்கள் மகாகவி பாரதியாரோடு நெருங்கிப் பழகியவர். கவிஞர்களோடு எச்சரிக்கை யாகப் பழக வேண்டும் என்று எனக்குச் சில அறிவுரைகளையும் கூறினார். பாரதிதாசன் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் பள்ளத்தூர் போயிருப்ப தாகச் சொன்னார். பாரதியாரைப் பற்றி ஒரு விசித்திர மான செய்தியையும் அறிவித்தார்.

ஒருநாள் செட்டியார் இல்லத்திற்குப் பாரதியார் வந்திருந்து தங்கியிருந்த போது, திடீரென்று "எனக்கு அவசரமாக ஒரு நூறு ரூபாய் வேண்டும்; கொடுப்பீரா?" என்றாராம் பாரதி. உடனே