| 48 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
காசாசை பற்றிக் கொள்ள முடியாது. காசும் தூசும் அவர்களுக்கு ஒன்றுதான். பற்றற்ற உண்மைத் துறவியின் மனநிலைதான் அவர்கள் மன நிலையும். பாரதியைப் புரந்த வள்ளல் பாரதியாரைப் பல்லாற்றானும் புரந்து, பேணிக் காத்துச் செட்டி நாட்டில் அவர் புகழ் பரவக் காரணமாக விளங்கியவர் வயி.சு. சண்முகனாரேயாவர். அதனைத் தமிழ்ப் பெரியார் திரு.வி.க.தமது நூலிற் சுட்டுவதைக் காணலாம். "அந்நாளில் எனக்குப் பக்கத் துணைவராய் முன்னணி வேலை செய்தவர் சிலர். அவருள் குறிக்கத் தக்கவர் நால்வர். அவர் சொ. முருகப்பச் செட்டியார். ராய, சொக்கலிங்கஞ் செட்டியார், வயி.சு. சண்முகஞ் செட்டியார், பிச்சப்பா சுப்பிரமணியஞ் செட்டியார்.... வயி.சு. சண்முகஞ் செட்டியார் பாரதிப் பித்தர். செட்டி நாட்டில், பாரதியத்துக்குக் கால் கொண்டவர் அவரே." -'திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்' "வயி. சு. சண்முகனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய பாரதி யார் இருமுறை - முதன்முறை 28-10-1919 முதல் 10-11-1919 வரையும் அடுத்த முறை 6-1-1920 முதல் 10-1-1920 வரையும் - செட்டிநாட்டுக்கு வந்திருந்தார். பாரதியாருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பாக அனுப்பி, வயி.சு.ச. இரண்டாண்டுகள் அவரை ஆதரித்து வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவை அச்சானதற்கு வயி.சு.ச. அவர்களே காரண மாவார்கள். இந் நூல்களின் கையெழுத்துப் பிரதி இவர் களிடம் இருந்து வருகிறது." - 'செட்டிநாடுந்தமிழும்' - 'சோமலெ' "திரு.வயி.சு. சண்முகஞ் செட்டியார் கானாடுகாத்தானில் பிறந்தவர். வயிரவன் கோயிலைச் சேர்ந்தவர். அவர் சிறந்த தேச பக்தர். கவி. சுப்பிரமணிய பாரதியாரை ஆதரித்த வள்ளல். தம் நெருங்கிய நண்பரான வயி. சு.ச. வைச் சந்திப்பதற்காக, பாரதியார் கானாடுகாத்தானுக்கு வந்து, சில நாள் தங்கியிருந் தார்... இந்து மதாபிமான சங்கத்தைப் பற்றியும் நகரத்தார்களைப் பற்றியும் பாரதியார் பாடல்கள் பாடுவதற்கு வயி.சு.ச. அவர்களே காரணமாவார். |