பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்5

நன்றியுரை

எங்கள் தந்தையரவார்கட்கு அறவே பிடிக்காத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் விளம்பரத்தை வெறுப்பவர்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை விளம்பரம் கருதிச் செய்ய வில்லை. அக்காலத்துத் தனவணிகர்கள் அதாவது நகரத்தார் சமூகத்தில் ஒரு எடுத்துக் காட்டாக, முன்னோடியாக வாழ்ந்த வர்கள் எங்கள் தந்தையார். இளைய தலைமுறையினர், கடந்த காலப் பெரியவர்களையும், கடந்தகாலச் சம்பவங்களையும் அறிந்து அதன் மூலம் பயனும், எழுச்சியும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த நூலை வெளியிடுகிறோம்.

தூக்கநிலையிலிருந்த செட்டிநாட்டையும் செட்டியார்கள் சமூகத்தையும் தட்டி எழுப்பி, தேசசேவையிலும், சமூக சீர்திருத்த சேவையிலும் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கை யிலருந்தவர்களை ஒன்று சேர்த்து "தனவைசிய ஊழியர்கள் சங்கம்" என்ற சங்கத்தை தோற்றுவிக்க முதல் காரணமாக இருந்தவர்கள் திரு.வை.சு.ஷண்முகம் அவர்கள்.

தந்தையாரவர்கள் 70 ஆண்டுகட்கு முன்பிருந்தே அவர்கள் நோயில் படுக்கும் வரை நாள் குறிப்பு எழுதி வந்தவர்கள். அவைகள் இருந்திருந்தால், காங்கிரசில், சுயமரியாதை இயக்கத்தில் அவர்கள் ஆற்றிய பணிகளைச் சான்றுகளுடன் எழுதியிருக்க முடியும். துர் அதிர்ஷ்டவசமாக அவைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

இந்த நூல் வெளியிடுவது சம்பந்தமான எண்ணத்தை எனது பெரும் மதிப்பிற்குரிய அருமைத் தம்பி கவியரசர் முடியரசனிடம் வெளியிட்டேன். நூல் தொகுத்து வெளியிட உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டேன்.

முன் நிகழ்ச்சிகள் தெரியாத நிலையில் தம்பி முடியரசன் சிறிது தயங்கினார். பின்னர் உதவி புரிவதாக ஒப்புக்கொண்டார். பெரும் முயற்சி எடுத்துச் சான்றுகளைப் பெற்று இந்த நூல் வெளிவரச் செய்த