பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

அருமைத் தம்பிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் எழுத்தோவியம் வழங்கிய முத்தமிழ்க் காவலர் உயர்திரு கி.ஆ.பெ.விசுவாதம் அவர்கள், சொக்கலிங்கம் புதூர் திரு பொன். முத்தழகப்ப செட்டியார் அவர்கள், திரு. ராம.சுப்பையா அண்ணன் அவர்கள், திரு.நீலவாதி ராமசுப்பிர மணிய அண்ணன் அவர்கள், பாவலர்மணி புலவர் திரு.ஆ.பழநி அவர்கள், திரு.முல்லை முத்தையா அவர்கள், திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்கள், அனை வர்க்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் அண்ணன் மக்களிடமும் என் புதல்விகளிடமும் "ஐயா அவர்கள் குறித்து உங்கள் அனுபவத்தை எழுதித் தாருங்கள்" என்று கூறினேன். அதன்படி எழுதித் தந்தனர். என் அண்ணன் மக்கள் திரு.ராசா சண்முகம் அவர்களுக்கும், திருமதி கமலா முத்து ராமனுக்கும், திருமதி சாந்தா சோமசுந்தரம் பி.எஸ்.வி.,க்கும், என் புதல்விகள் திருமதி.சுசீலா சுப்பிரமணியத்திற்கும், திருமதி டாக்டர் மணிமேகலை மாதவன் எம்.டி.,க்கும் எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த நூலை வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிடக் கருதி அதன் உரிமையாளர் திரு.திருநாவுக்கரசு அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்தேன். நான் கூறிய விவரங்களைக் கேட்டவுடன் இதை வெளியிடு வதில் அவர்கட்கும் ஓர் கடமை இருப்பது போலக் கருதி தயங்காது உடனேயே ஒப்புக் கொண்டார்கள். அவர்கட்கு எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மாற்றும் பலவகைகளிலும் ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காரைக்குடி                                                                              பார்வதி நடராசன்

20.4.1989