பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்51

கம்பியை எடுத்துப் பூட்டிலே ஓங்கி அடிச்சேன். உடைஞ்சு விழுந்திடுச்சு. மூணு பேரும் வேகமாக வீடு வந்து சேர்ந்தோம்."

இவ்வாறு கோபமாக வெளிவந்த பாரதிதாசனை அதன்பிறகு பலமுறை இன்பமாளிகையிற் பார்த்திருக்கிறேன். அந்த நேரத்திற்குத் தான் அப்படி. அதன் பிறகு அதை மறந்தே விடுவார்கள்.

வயி.சு. சண்முகனாரும் பாவேந்தரும் இந்நாள் இலர். அவர்க்குப் பிறகும் கூட இரு குடும்பமும் தொடர்பு கொண்டு விளங்குகிறது.

நாமக்கல் கவிஞர் நட்பு

பிற்காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய நாமக்கல், வே. இராமலிங்கம் பிள்ளையவர்கள். தொடக்கத்தில் ஓவியக் கலையில் வல்லவராக விளங்கி வந்தார். சிறந்த முறையில் ஓவியம் வரைந்து விற்பனை செய்யும் நோக்கத்துடன் செட்டிநாட்டிற்கு வந்திருந்தார்.

அம்முறையில் கானாடுகாத்தானுக்கு வந்து வயி.சு. சண் முகனாரைச் சந்தித்தார். அப்பொழுது பாரதியார் அங்கு வந்து தங்கியிருக்கும் செய்தியறிந்து, அவரைக் காணத் துடித்தார். பாரதியார் வெளியிற் சென்றிருப்பதாகச் சண்முகனார் கூறினார். அதன்பின் நாமக்கல் கவிஞரே கூறுகிறார். கேளுங்கள்:

"ஊருக்கு அரைமைல் தூரத்தில் ஒரு கிராம தேவதையின் கோயில். அங்கே ஒரு மரத்தின் அடியில் பாரதியாரும் அவருடைய நண்பர்களும் உட்கார்ந்து கொண்டு, களித்துச் சிரித்துக் கலகலப் பாகப் பேசிக் கொண்டிருந்தனர். கையெழுத்து மறைந்த நேரம். வெளிச்சம் குறைவான இடத்தில் உட்கார்ந் திருந்ததால் முகத்தை நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பலமுறை கேள்விப் பட்டிருந்த எனக்குப் பாரதி யாருடைய படம் ஒன்று என் மனத்தில் பதிவாகியிருந்தது. முண்டாசுக் கட்டைக் கண்டவுடனேயே பாரதியாரை அறிந்து கொண்டேன்... வேங்கடகிருஷ்ணையர், "இவர் ராமலிங்கம் பிள்ளை, நல்ல ஆர்டிஸ்ட், உங்களைப் பார்க்க வேண்டுமென்று..." என்று முடிக்கு முன், பாரதியார்,

"ஓ! ஓவியக் கலைஞரா? வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்... பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்... பேசிக் கொண்டே அவர் தங்கியிருந்த ஜாகைக்கு (இன்ப மாளிகைக்கு)ப் போனோம். அங்கே