52 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது. உணவுக்குப் பின் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு... அங்கே படுத்துக் கொண்டோம்." - 'என் கதை' - நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில்தான் பாரதியாரும் நாமக்கல் கவிஞரும் முதன் முதலாகச் சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது, நாமக்கல் கவிஞர், தமக்கும் கவிதை எழுதத் தெரியுமென்று கூறி, ஒரு பாடலையும் பாடிக் காட்டினார். கேட்டு மகிழ்ந்த பாரதியார் 'பாண்டியா! நீ ஒரு புலவனடா' என்று பாராட்டினார். கவியரசரால் பாராட்டப்பட்ட ஓவியக் கலைஞர் இராம லிங்கம் பிள்ளை, பின்னை நாளில் 'அரசவைக் கவிஞ'ராக விளங்கினார். நாமக்கல் கவிஞர் இன்ப மாளிகையில் தங்கியிருக்கும் பொழுது, சண்முகனாரிடம். 'உங்கள் உருவத்தை (ஆயில் பெயிண்டால்) ஓவியமாக வரைந்து தருகிறேன்' என்றார். சண்முகனார் அதை விரும்பவில்லை. ஆனாலும் வந்தவரை வறிதே விடுக்க விருப்பமில்லை. 'அதெல்லாம் வேண்டாம். தலைவர்கள் படத்தை வரைந்து கொடுங்கள்' என்று மறுமொழி தந்தார். ஏசு, புத்தர், இராமலிங்க அடிகளார், காந்தியடிகள் பால கங்காதரதிலகர், சிவாஜி போன்றோர் படங்களை வரையச் செய்தார்கள். படங்களின் எண்ணிக்கை அளவுக்கு ஏற்ப உடனே தோதகத்தி அலமாரி செய்யப்பட்டது. அதன்பின் அந்த அலமாரியில் படங்களை வைத்தார்கள். குழந்தைகளும் சண்முகனாரும் தினமும் காலையில் அப்படங்களைக் கும்பிட்டு வணங்கி வருவார்கள். சண்முகனார், அவ்வோவியங்களைக் கண்டு மகிழ்ந்து தக்க பொருட்கொடை தந்து உதவினார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையவர்கள் எளிமையாக வாழ்ந்த போதிலும் பெருமிதங்குன்றாது வாழ்ந்த பெருமகன். அவர் எவரிடத்தும் பொருள் வேண்டார். எவரேனும் கொள்ளெனக் கொடுப்பினும் கொள்ளேன் என்று மறுத்து விடுவார். இவருக்கு நேரிடையாகப் பொருளுதவி செய்யா விடினும், அவர்தம் நிகழ்ச்சி களுக்காக நன்கொடைகள் வழங்கியிருப்பதாகச் செவி வழிச் செய்தி. |