பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்55

என்று பாடியவரல்லவா? அதனால், அது தானாக வரவேண்டுமே யொழிய, நினைத்த போதெல்லாம் வராது என்று சட்டென்று கூறி
விட்டார்.

மீண்டும் உலவத் தொடங்கி விட்டார். சிறிது நேரம் உலா நடக்கிறது; சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது. பாடலும் பிறக்கிறது. 'கவிதை தானே, இதோ பாடுகிறேன். கேளுங்கள்' என்று சொல்லிப் பாடத் தொடங்கிவிட்டார். பாடி முடிந்தது. பின்னர், அப்பாடலைத் தம் கையாலேயே எழுதிக் கையொப்ப மிட்டு நாளுங் குறித்துச் சண்முகனாரிடம் கொடுத்தார். அப்பாடலை அப்படியே தருகி றோம்;

பல்லாண்டு வாழ்ந்தொளிர்க! கானாடு
    காத்தநகர்ப் பரிதி போன்றாய்,
சொல்லாண்ட புலவோர்தம் உயிர்த்துணையே,
    தமிழ்காக்குந் துரையே, வெற்றி
வில்லாண்ட இராமனைப்போல் நிதியாளும்
    இராமனென விளங்கு வாய்நீ
மல்லாண்ட திண்டோளாய், சண்முகநா
    மம்படைத்த வள்ளற் கோவே!

செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர்விளக்கே,
    பாரதமா தேவி தாளைக்
கட்டியுளத் திருத்திவைத்தாய், பராசக்தி
    புகழ்பாடிக் கனிந்து நிற்பாய்,
ஒட்டியபுன் கவலைபயம் சோர்வென்னும்
    அரக்கரெலாம் ஒருங்கு மாள
வெட்டியுயர் புகழ்படைத்தாய் விடுதலையே
    வடிவமென மேவி நின்றாய்.

தமிழ்மணக்கும் நின்னாவு; பழவேத
    உபநிடத்தின் சார மென்னும்
அமிழ்துநின தகத்தினிலே மணம்வீசும்;
    அதனாலே அமரத் தன்மை
குமிழ்படநின் மேனியெலாம் மணமோங்கும்;
    உலகமெலாங் குழையும் ஓசை
உமிழ்படுவேய்ங் குழலுடைய கண்ணனென
    நினைப்புலவோர் ஓது வாரே.