'பிள்ளைகள் ஆசைப்பட்டார்கள், அதற்காக ஏன் இவ்வளவு கடுமையாகப் பேச வேண்டும்?' என்று எங்கள் சார்பாக வாதாடி னார்கள் அம்மா. சீற்றம் மேலும் மிகுதியாயிற்று. நான் எவ்வளவோ அமைதி கூறினேன். அடங்கவில்லை. விட்டு விட்டேன். அவர் பேசும் வரை பேசி விட்டு, அமைதியுற்றார். இது தான் வேளையென்று கருதி நான், ஐயா உங்கள் ஒப்பு தலின்றி இதனை வெளியிட்டது தவறுதான். ஆனால் இத்தவற்றை நாங்கள் செய்யாதிருந்தால், நீங்கள் 'தேசத் துரோகம்' செய்தவர் களாகக் கருதப் படுவீர்கள் என்றேன். 'என்ன அப்படிச் சொல்கிறாய்?' என்றார். ஆம்; பாரதியின் பாடல்கள் நாட்டுக்குரிய சொத்து. பொதுச் சொத்தாகிய பாரதியின் பாடலொன்றை நாட்டுக்குக் கொடுத்து விடாமல் மறைத்து வைப்பது நாட்டுக்குச் செய்யும் குற்றமல்லவா? என்றேன். உரத்துச் சிரித்து விட்டார். அதன்பின் அமைதியாகப் பேசினார். 'நீங்கள் வெளியிட்டது தப்பில்லப்பா; பாரதி இந்தப் பாடலில் என்னை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்திருக் கிறார். நான் இப்பொழு திருக்கும் நிலையில் இது வெளிவந்தால் ஊரார் என்ன நினைப் பார்கள்? ஏதோ உள் நோக்கத்தில் விளம்பரப்படுத்திக் கொள்கிறான் என்றுதானே எண்ணுவார்கள். அதனால்தான் வேண்டாமென்று சொல்கிறேன்' என்று அன்றிருந்த நம் நிலைக்கு இரங்கி வருந்திக் கூறினார். சித்திரபாரதி செப்புவது சண்முகனாருக்கும் பாரதியாருக்கும் இருந்த தொடர் பையும், பாரதியின் குடும்பத்தை ஆதரிக்க அவர் எண்ணி யதையும், அவர் மீது பாரதியார் பாடல் பாடியதையும் திரு. ரா.அ. பத்மநாபன் தாம் எழுதிய 'சித்திரபாரதி' என்ற நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். "கானாடுகாத்தானுக்கு வருமாறு வை.சு. சண்முகம் என்ற தனவணிக அன்பர் வேண்டிக் கொண்டதின் பேரில் சுப்பிரமணிய பாரதியார் 28-10-1919 அன்று காலை 10.30 மணிக்கு, காரைக் குடியில் சிவன் செயல் ஊருணித் தென்கரையிலிருந்த மதுரை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கினார். பல இளைஞர்கள் அவரை வரவேற்றனர். |