பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்65

உள்ளூர் உறவினர் வந்து, 'மீண்டும் பங்காளிகளிடம் சென்று, நேரில் வேண்டிக் கொண்டால் வந்து விடுவார்கள்' என்று கூறினார்கள். 'அதெல்லாம் முடியாது; முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப் பட்டு விட்டது. வருவோர் வரட்டும்; என் கொள்கைப்படி திருமணம் நடந்தே தீரும்' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் சண்முகனார்.

கொள்கை வென்றது

திருமணம் 7-7-1935 அன்று தமிழவேள் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தந்தை பெரியார், அண்ணன் இராம. சுப்பையா, செயல் வீரர் நீலாவதி, இராம. சுப்பிரமணியன், சீர்திருத்த வீரர் சொ. முருகப்பனார், முற்போக்குச் சிந்தனை யாளர் மு. சின்னையா செட்டியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், கொடைச் செல்வர் மெ.செ.மெ.மெ. மெய்யப்பச் செட்டியார், பூவாளுர் பொன்னம் பலனார், ஆறு. ஆ. ராம. சொக்கலிங்கம் செட்டியார் போன்ற பெருமக்களும் இயக்கத் தொண்டர்களும் கூட்டமாக வந்திருந்து சிறப்பித்தனர். தந்தை பெரியாரவர்களும் ஏனைய தலைவர்களும் வாழ்த் துரைக்கத் திருமணம் எவ்வகை ஊறுமின்றி வெற்றியுடன் இனிதே நிறைவேறியது.

தாம் செய்வது சரியெனத் தெரிந்தால் எவ்வகை எதிர்ப்போ தொல்லையோ வரினும் பின்வாங்கார். செய்தே வெற்றி காண்பார். எதிர் நீச்சலிலேதான் இவர்க்கு இன்பம். தவறெனத் தெரிந்தால் திருத்திக் கொள்ளவும் தயங்கார்.

எளிமைப் பாங்கு

சண்முகனார் நிமிர்ந்த தோற்றங் கொண்டவர்; புன்முறுவல் தவழும் முகத்தினர்; எப்பொழுதும் வெற்றிலை மென்று கொண் டிருக்கும் வாயினர்; அன்பு தவழும் பார்வையாளர்; உரத்த குரலிற் பேசும் இயல்பினர். ஆனால் அக்குரலில் 'அதிகாரம்' இராது. அன்பும் உரிமையும் குழைந்திருக்கும். குறுநில மன்னர்போன்ற பெருமித நடையுடையவர். ஆயினும் அனைவரிடமும் எளிமை யுடன் பழகுவார்.

கலப்பு மண ஆதரவு

கலப்பு மணத்திற்குப் பேராதரவு நல்குவார். பல கலப்பு மணங் களைத் தாமே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். நீலாவதி, இராம. சுப்பிரமணியம் கலப்பு மணம் செய்து கொண்ட பொழுது,