பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்79

அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் அவர்கள். செட்டி நாட்டு அரசர் நீதிக்கட்சியிலும் வை.சு. சண்முகம் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் பற்றுக் கொண்டவர்கள். இருவரும் ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்பவர்கள். 1927ல் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த பொழுது செட்டிநாடு சென்று கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் இல்லத்தில் இராஜாஜியுடன் தங்கியிருந்த செய்தி நகரத்தார் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்று.

வை.சு. சண்முகம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகப் பணிபுரிபவர். தனவைசிய ஊழியர் சங்கமொன்றைத் தமிழ்க் கடல் ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிர மணியம், காசிச் செட்டியார், காந்திமெய்யப்பன் முதலிய நண்பர்களின் துணைகொண்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருமை அவருக்கு உண்டு. அடுத்து இப்பெரு மக்களால் தோற்றுவிக்கப் பெற்றதும் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல் பெற்றது மான இந்து மதாபிமான சங்கம் இன்றும் காரைக்குடியில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்திருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்து அவரைப் பற்றியும் அவரது தொண்டுகளைப் பற்றியும் புகழ்ந்து பல பாடல்களைப் பாடி அவரிடம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட வை.சு. சண்முகம் அவர்கள், தன்னைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடியிருப்பதால் அதனை அச்சிட்டு வெளியிட விரும்பாமல் பல ஆண்டுகள் வரை தன் பெட்டியி லேயே வைத்திருந்தார். அப்பாடல்கள் காரைக்குடிக் கவிஞர் முடியரசனிடம் கிடைத்து அதை அவர் 'எழில்' இதழில் வெளியிட்டார்.

சமயப்பணி, கல்விப்பணி, நாட்டுப்பணி மட்டுமல்ல சமூக சீர்திருத்தப் பணியிலும் நகரத்தார் சமூகத்தில் பலர் சிறந்து விளங்கி உள்ளனர். அதிலும் பெரியார் வழியைப் பின்பற்றிச் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து முதல் முதலாகக் கலப்பு மணம் செய்து கொண்டவர் மரகதவல்லி முருகப்பா அவர்கள். இதனை அடுத்து அச்சமூகத்தில் நடந்த கலப்புத்திருமணங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நீலாவதி இராம. சுப்பிரமணியம் திருமணம்,