80 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
அருணகிரி சுந்தரி திருமணம், வை.சு. சண்முகம் மஞ்சுளா திருமணம் முதலியன. "குமரன்" ஆசிரியர் காரைக்குடி சொ. முருகப்பா அவர்கள் காரைக்குடியில் நடத்திய இராமாநாதபுர மாவட்டச் சுயமரியாதை மாநாட்டிற்குப் பொருளாலும் உழைப்பாலும் பேருதவி புரிந்தவர் வை.சு.சண்முகம் அவர்கள். சுயமரியாதை இயக்கத்தில் புரோகித மறுப்பு என்ற ஒரு கொள்கையு முண்டு. அதை ஏற்று நகரத்தார் சமூகத்தில் பிறந்த நடராஜனுக்கும் தன் மகள் பார்வதிக்கும் புரோகித மறுப்புத் திருமணத்தை முதன் முதலாக நடத்திக் காட்டிய பெருமை வை.சு. சண்முகம் அவர் களுக்கு உண்டு. இத்திருமணத்தை 53 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1935ல் நானும் பெரியாரும் சென்று நடத்தி வைத்தது பெரும் புரட்சியாகவும் கண் கொள்ளாக் காட்சியாகவும் இருந்தது. அன்று எடுத்த புகைப் படமும் மேல்மாடியில் இருப்பவர்களுடைய தலைக்கும் கீழ்மாடியில் இருப்பவர்களுடைய காலுக்கும் ஒளி வேற்றுமை யின்றி அழகுற எடுத்த பெரிய புகைப்படம் நேற்று எடுத்தது போல் இன்னும் என் இல்லத்தில் ஒளி வீசிக் கொண்டிருக் கிறது. நான் வை.சு. சண்முகம் அவர்களை 60 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1929ல் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அதன் பிறகு இயக்கம் சம்பந்தமான பல கூட்டங்களில் சந்தித்து உரையாடி மகிழ்வ துண்டு. அப்பொழுது ஒரு முறை தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள், முதல் கப்பலில் மலேசியா சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். நான் அதே சமயம் மறு கப்பலில் அங்குச் சென்று நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்து அழைத்துக் கோலாலம்பூரில் உள்ள தன் இருப்பிடத்தில் விருந்து கொடுத்து மகிழ்ந்தவர் வை.சு.சண்முகம் அவர்கள். தமிழ்மக்களைக் கட்சிகள் பிரித்தாலும், மொழி ஒன்றுபடுத்தும் என்ற உண்மையை அவ்விருந்துக் கூட்டம் மெய்ப்பித்தது. வை.சு. சண்முகம் அவர்கள் பெரும் குடும்பத்தைச் சார்ந்த வராதலின் பெருங்குணமும் பெருமனமும் படைத்திருந்தார். அதிகமாகப் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததினால் தன் |