பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்81

குடும்பத்தைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. எவரையும் எளிதாக நம்பி விடுவார். இதனாலேயே அவரது குடும்பத்திற்கு ஏமாற்றமும் வம்புகளும் வழக்குகளும் ஏற்பட்டு அவரைத் தொல்லைப் படுத்தின. என்றாலும் அவர் மன உறுதியோடும் மகிழ்வோடும் வாழ்ந்து வந்தார். இறுதியாக வலக்கையில் கொடுப்பதை இடக்கை அறியாமல் செய்து வந்த கொடை மறைந்து வந்தது போல அவர் உடலும் இவ்வுலகை விட்டு மறைந்து போயிற்று. என் செய்வது? அவரது காலத்திற்குப் பிறகு அவரது செல்வ மகள் பார்வதி இன்றும் நல்ல உடல் நலத்தோடு இருந்து வருகிறார். தங்கை பார்வதிக்கு இப்பொழுது வயது எழுபத்தொன்று இருக்கலாம். வை.சு.சண்முகம் அறக்கட்டளையென ஒன்று நிறுவி யிருக்கிறார் என்ற செய்தி நம் அனைவரையுமே மகிழ்ச்சி யடையச் செய்கிறது.

அன்பர் திரு. வை.சு. சண்முகம் அவர்கள் மறைந்தாலும் அவரது தொண்டும் புகழும், தமிழும் தமிழினமும் உள்ளவரை மறையாது.