82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
11 "அஞ்சா நெஞ்சர் வை. சு" இராம சுப்பிரமணியம் (நீலாவதி) (இராம சுப்பிரமணியம் அவர்கள் தம் துணைவி யார் நீலாவதி அம்மையாருடன் சுயமரியாதை இயக்கத்திலும் பேராயக் கட்சியிலும் உண்மை யாகத் தொண்டு செய்தவர். சண்முகனாருடன் ஒன்றிப்பழ கியவர். அன்றைய நிகழ்ச்சிகளை இக்கட்டுரை வாயிலாக நினைவு கூர்கிறார்.) தமிழ் நாட்டில் நகரத்தார் வாழும் கானாடுகாத்தானில் சீர்திருத்த வாலிபர்களுக்கு ஓர் இரும்புத் தூணாக இருந்தவர் அமரர் வை.சு. சண்முகம் ஆவார். |