பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்83

தனவணிக நாட்டில் அரை நூற்றாண்டுக்கு முன் சீர்திருத்தத் துறையில் ஆர்வம் காட்டிய இளைஞர் வரிசையில் சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியம், ராய சொக்கலிங்கன், மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார், (சொ. முருகப் பரின் குரு) இராமச் சந்திரபுரம் சு. பழநியப்பா, தேவகோட்டை அ.வெ. தியாகராஜா போன்றவர்களின் வரிசையில் முதலிடம் பெற்ற தியாகச் செம்மல். வை.சு. சண்முகம் ஆவார்.

உளுத்துப் போன நிலையிலிருந்த 96 ஊர் நகரத்தார் சமூகப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்தி வைக்க அஞ்சா நெஞ்சுடன் போராடினார்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தலைசிறந்த தமிழறிஞர்கள், கவிஞர்களின் புரவலராகவும் கம்பீரத்தின் சின்னமாகவும் வாழ்ந்தவர்.

மகாகவி பாரதியாரை இன்று போற்றும் தலைவர்களும் பிறரும் அன்று புறக்கணித்து ஒதுக்கிய காலத்தில் அவருக்கு உதவி செய்து, வேண்டிய பொருளும்கொடுத்துக் கைதூக்கி விட்டவர் அருமை அன்பர் வை.சு. சண்முகம் ஆவார்.

1919-ம் ஆண்டு பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் வீட்டில் தங்கிய பொழுது "கானாடு காத்த நகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே" என்று பாடியுள்ளார். மேலும் "செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே" என்றும் பாடியிருக் கிறார்.

திருச்செந்தூர்ப் பக்கமுள்ள சேரமாதேவி என்ற ஊரில் தேசபக்தர் வ.வெ.சு. ஐயர்அவர்கள் காந்தீய முறையில் ஒரு குருகுலம் ஆரம்பிக்க எண்ணியபோது, அதற்கு நிலம் வாங்கிக் கொடுத்த பெருமை அமரர் வை.சு. சண்முகனாரையே சேரும். அதோடு மட்டுமல்ல குருகுலம் கட்டிடம் கட்ட வை. சு.ச. மலேயா சென்று நன்கொடை யாகப் பொருள் சேர்த்துச் சுமார் 35,000 வெள்ளி சேர்த்தார். குருகுலம் காந்தீய முறையில் சரியாக நடைபெறவில்லை என்றும் சாதி பிரித்துச் சாப்பாடு போடப்பட்டது என்றும் தெரிந்தது. மலேயாவில் திரட்டப் பட்ட நன்கொடைப் பணத்தைக் கொடுத்த வர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று திரு.வி.க. சேலம் டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, சொ. முருகப்பா, ராய சொ., சுரேந்திரநாத் ஆரியா, முதலியவர்கள் தீர்மானித்தப்படி திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்தக் குருகுலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் திருமதி நீலாவதி அவர்களும் 1931-ம் வருடம் சேரன் மாதேவி சென்று பார்த்து வந்தோம். உயர் சாதிப் பையன் களுக்கு ஒரு அறையிலும் மற்ற பையன்களுக்கு ஒரு அறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு காந்தீய முறை குருகுலம் இப்படியா! என்று மனம் வருந்தினோம்.

ஒப்பற்ற தேசபக்தர் வ.வே.சு. ஐயர் தூய்மை மனம் படைத்தவர் தான். குருகுலம் நிர்வகித்தவர் வைதீக மனம் படைத்த மகா தேவய்யர் என்பவர். இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டது மட்டுமல்ல இதற்கு ஒரு போராட்டமே நடை பெற்றது. இச்சம்ப வந்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கக் காரணம் ஆகும் எனலாம்.

வை.சு.ச. அவர்கள் புதுவை பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகியவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட வை.சு.ச. பாரதி தாசனுக்குப் பல ஆண்டுகளாக மிகுந்த ஆதரவு காட்டி வந்திருக் கிறார்கள்.