பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்85

12
போராட்ட வீரர்

இராம. சுப்பையா

(திராவிட இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க இடம் பெற்றவர் அண்ணன் இராம. சுப்பயைh அவர்கள். சண்முகனாரிடம் நெருங்கிப் பழகிய அவர், சண்முகனாரின் வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க வீரச் செயல்களை வரைந்து காட்டுகிறார்.)

மூடநம்பிக்கை முடைநாற்றம் வீசிய காலத்தில், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், செட்டி நாட்டு மண்ணில் அரிய சீர்திருத்தச் சாதனைகளைச் செய்த செம்மலே திரு. வை. சு. சண்முகம் அவர்கள்.

'வை.சு' என்றாலே அனைவரும் அறிவர். செட்டிநாட்டு அரசருக்கு இணையாக அங்கே இவர்கள் புகழும் மேலோங்கி நின்றது. இவரின் சிந்தனை ஆற்றலும், செயல் திறனும், விடா முயற்சியும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சா நெஞ்சமும் அந்த அளவுக்கு இவரை உயர்த்தின.

அந்த நாள்களில், திரு. வை.சு. அவர்களுடன் இணைந்து, நான் ஆற்றிய பணிகள் சுவையானவை; என்றும் நினைவி லிருந்து அகலாதவை.

"தனவைசிய இளைஞர் சங்கம்" என்ற பெயரில் திரு. வை.சு. அவர்களும் மற்ற பெரியவர்களும் ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். திரு. சொ. முருகப்பா, திரு. ராய. சொ. திரு. பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்களும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள். அந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்குக் குறிப் பிட்டாக வேண்டும்.

அப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட் டாருக்குத் திருமண நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள வரதட்சணைக்கு நேர்மாறான