92 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
14 எங்கள் வழிகாட்டி சோ. இராசா சண்முகம் (சண்முகனாரின் மகன் வழிப் பேரன் இராசா சண்முகம், தம் பாட்டனாரின் பண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, ஐயா பேரப் பிள்ளை களை எவ்வாறு வழி நடத்திச் சென்றார் என்பதையும் உளமுருகி எடுத்துக் காட்டுகிறார்.) தலைவர்கள் தொடர்பு 'தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த' அண்ணல் காந்தியடிகள். தியாக வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட - இரும்பு மனிதராகத் திகழ்ந்த வ.வே. சுப்பிரமணிய ஐயர், எத்துணைத் தொல்லைகள் துன்பங்கள் தொடரினும் கொஞ்சமும் அஞ்சாது, தேசபக்தியை நாடு முழுதும் கொழுந்து விட்டெரியச் செய்த தீர்க்கதரிசி மகாகவி பாரதி. 'நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டு ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன்' என முழங்கிய பாவேந்தர் பாரதிதாசன். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தலைசிறந்த தலைவரும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவரும் ஆன பெரியார் ஈ.வே.ரா., போன்ற பெருமக்களை யெல்லாம் வரவேற்று, அவர்களுடைய கொள்கைகளையும் சான்றாண் மையையும் ஏற்று அவர்களுடைய அன்பையும் நட்பையும் பெற்று விளங்கியவர் வை.சு.ச. அவர்கள். காங்கிரசுப் பேரியக்கத்திலும் பின்னர்ப் பொது வுடைமைக் கட்சியிலும் சேர்ந்து, பொது வாழ்வில் தம்மை மெழுகாக்கிக் கொண்ட ப. ஜீவானந்தம் அவர்கள் இறுதிக் காலம் வரை வை. சு. |