15 "வைராக்கியம் படைத்த வை.சு. சண்முகனார்" எஸ்பி. முத்துராமன் (திரைப்பட இயக்குநர் சுப. முத்துராமன், தம் மனைவி கமலாவின் பாட்டனார் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.) அய்யா வை. சு. சண்முகம் அவர்களைப் பற்றி நினைவு நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாகும். இக்கால இளைஞர்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஒரு தைரியமே வரும். "இன்ப மாளிகை" என்று தன் வீட்டிற்குப் பெயர் வைத் தார்கள். அங்கு வராத தலைவர்களே இல்லை. மகாத்மா காந்தி யார், பாரதியார், பாரதிதாசன், வ.வே. சு. ஐயர் அனைவரும் இன்ப மாளிகையின் விருந்தினர்கள். வழக்கு ஒன்றின் காரண மாக அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று, ஒரு சிறிய வீட்டில் வாழ நேர்ந்தபோதும் இன்பமாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் மகனார் சோலை அவர்கள் (என் மாமனார்) மூன்று தலைமுறை வழக்கை எடுத்துக் கொண்டு, சிங்கப்பூர், மலேசியாவில் தாமே நீதிமன்றங்களில் வாதாடினார்கள். அவரின் வாதத்திறமையை வழக்கறிஞர்களே பாராட்டினார்கள். வேலைக்கும் போய்க் கொண்டு இதனைச் செய்தார்கள். அவர்கள் திறமை - கடுமையான உழைப்பு - தைரியம் வேறு யாருக்கும் வராது. அவர்கள் பட்ட கஷ்டங்கள் பலனாகும் போது அவர்கள் இல்லை. கமலாவை நான் திருமணம் செய்து கொண்ட அன்று என்னிடம் கமலாவை நன்கு வைத்துக் கொள்ள வேண்டு மென்று காரண |