பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்107

2. பிற சேர அரசர்கள்

பல்வேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பாடிய பாடல்கள் நானூறு கொண்டது புறநானூறு. அவற்றுள் 267, 268 எண்ணுள்ள பாடல்கள் முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பாடல்கள் சிலவற்றில் சில அடிகள் கிடைக்கவில்லை. சில பாடல் களைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை. சில பாடல்கள் யார்மீது பாடப்பட்டவை என்னும் குறிப்புச் சிதைந்து போயிற்று.

இந்த நானூறு பாடல்களையும் தொகுத்தவர் யார் என்று தெரிய வில்லை. தொகுத்தவர் ஒவ்வொரு பாடலுக்கும் சுருக்கக் குறிப்பு ஒன்று தந்துள்ளார். அக் குறிப்புகளை அறிஞர்கள் ‘கொளு’ என்று குறிப்பிடு