பக்கம் எண் :

108மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கின்றனர். யாரை யார் பாடினார் என்னும் குறிப்பு அதில் சிறப்பிடம் பெறுகிறது. சில பாடல்களுக்குப் பாடப்பட்ட சூழலும் கூறப்பட்டுள்ளது.

சில அரசர்கள் பெயருக்கு இந்தக் கொளுக் குறிப்புச் செய்த தொகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பாளி. எடுத்துக்காட்டாக ஒன்று குறிப்பிடலாம். சேரமான் மாரிவெண்கோ என்ற அரசன், சோழ அரசன் ஒருவனோடும் பாண்டிய அரசன் ஒருவனோடும் சேர்ந்திருந்த போது ஒளவையார் பாடியதாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் அவர்கள் பெயர் குறிப்பாலும் உணர்த்தப்படவில்லை. இதுபோன்ற குறிப்புத் தவறாகவும் இருக்கமுடியும் என்பதை 389 ஆம் எண்ணுள்ள பாடல் தெரிவிக்கின்றது. இந்தப் பாடலில் புலவர் தாம் பாடிவந்த அரசனிடம் (யார் என்று தெரியவில்லை) ஆதனுங்கன் போலப் பரிசில் தரவேண்டும் என்று வேண்டுவதைக் காண்கிறோம். பாடலில் கொளுக் குறிப்பு ஆதனுங்கனையே பாடியுள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டது. இது பொருந்தாக் கூற்று. இதுபோன்ற நிலைகள் இருப்பதால் கொளுக் குறிப்பினால் மட்டும் தெரியவரும் செய்திகளை அப்படியே முழுமையான உண்மைகள் என்று நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

பதிற்றுப்பத்துச் சேர அரசர்களைப்பற்றிய வரலாற்றில் அவர்களோடு தொடர்புடைய செய்திகள் பிற நூல்களில் எங்கு இருந்தாலும் உடன் எடுத்துக் கூறப்பட்டதுபோல் புறநானூற்றில் சிறப்பாகக் காணப்படும் அரசர்களின் வரலாற்றைக் காணும்போது பிற நூல்களில் கிடைக்கும் செய்திகளும் ஒருங்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றன.

சேரமான் வஞ்சன்

வாய்மொழி வஞ்சன்1 என்னும் திருத்தாமனாரின் தொடரால் இவனைப்பற்றி அறிகிறோம்.

நாடு

அருவிகள் பாயும் மலை பாயல் மலை. அந்த மலைப்பகுதியைக் கொண்ட நாட்டுக்கு இவன் அரசனாக விளங்கினான்.

வீரம்

மக்களை மகிழ்விப்போராகிய கூத்தர், பாணர், புலவர்கள் இவனது ஊரில் நுழையலாமே அன்றி, இவனது பகைவர்களால் அவ்வூரை


1. புறம். 398 : 8