| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 109 |
நெருங்கவும் முடியாது. பகைவர்களுக்கு அந்த ஊர் புலிக்கூட்டங்கள் தூங்கும் குகை போன்றது. கட்டுகளால் மாட்சிமைப்பட்ட கடி அரண் ஒன்றில் வாழ்ந்து வந்தான். இங்ஙனம் கூறப்படுவதால் கோட்டையது வலிமையும், இவனைச் சார்ந்தவர்களின் ஆற்றலும் பெறப்படும். இவனது வீரமும் உய்த்துணரப்படும். கொடைத்தன்மை இவன் தன்னை நாடிவந்த புலவர்களுக்கெல்லாம் பரிசில் வழங்கினான். அதிலே ஒரு தனிச் சிறப்பாக இவன் வழங்கினான். பரிசில் பெற வந்தவர்களிடையே உயர்வு தாழ்வு காணாது முன் வந்தவர்களுக்கு முன்னும், பின் வந்தவர்களுக்குப் பின்னும் வரிசை முறைப்படி வழங்கினான். திருத்தாமனார் என்னும் புலவர் இவனைப் பாடிச் சென்றார். அவரை இவன் சிறப்பித்த பாங்கில் தனிச்சிறப்பு உண்டு. மான் கறி வறுவலும், கொக்கின் நகம்போலும் நெல்லரிசிச் சோறும் கொடுத்து விருந்து படைத்தல் வியப்பன்று. தூசி படிந்த அவரது கிழிந்த உடையை நீக்கிவிட்டுப் புத்தாடை உடுத்தது வியப்பன்று. இவன் தன் உடையின்மேல் பகட்டுக்காக ஓர் உயர்ந்த ஆடை அணிவது வழக்கம். புகை விரிந்தாற்போல் பொங்கித் தோன்றும் பட்டாடை அது. இவனுக்கே உரித்தான ஒரே ஓர் ஒப்புயர்வற்ற ஆடை அது. அந்த ஆடையை இவன் புலவர்க்கு அணிந்து மகிழ்ந்தான். ஒப்புநோக்கம் அதியமான் தனக்கு எதிர்பாராமல் கிடைத்த நாவல்கனியை அவ்வைக்கு ஈந்து மகிழ்ந்தான். வஞ்சனோ தன்னிடம் இருந்ததையே புலவர்க்கு அளித்து மகிழ்ந்தான். பண்பு நலம் இவன் எப்போதும் சொன்ன சொல் தவறியதில்லை. கோசர்கள் ‘வாய்மொழிக் கோசர்’ எனச் சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்கள் வாய் மொழிக்கும் இவனது வாய்மொழிக்கும் வேறுபாடு உண்டு. கோசர்கள் போரில் வஞ்சினம் கூறுவர். கூறிய மொழி பொய் போகாது சூழ்ச்சி செய்தேனும் செயலை நிறைவேற்றிக் கொள்வர். இந்தவகையில் அவர்களது வாய்மொழி வஞ்சின வாய்மொழியாகும். வஞ்சன் வாய் மொழியோ கொடையில் வாய் மொழி. தருவதாகக் கூறி, கூறிய சொல் |