பக்கம் எண் :

114மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்1

நாட்டுப் பரப்பு

வங்காளக் குடாக்கடலும் அரபிக்கடலும் இவனுடைய கடல்கள் என்று சொல்லும்படி இவனது நாட்டுப் பரப்பு தமிழகத்தின் தென்பகுதி முழுவதும் பரவியிருந்தது.

வானவரம்பன்

இவனே வானவரம்பன் என்னும் சிறப்புப் பெயரை முதன் முதலில் பெற்றவன் என்று தெரிகிறது. ஞாயிறு இவனது கீழைக்கடலில் தோன்றி இவனது மேலைக்கடலில் மறைந்தது என்று சான்று கூறுகிறது. வடக்கில் இருந்த நாடுகள் இவனைப் புகழ்ந்து கொண்டிருந்தமையால் ஒரு வகையில் இவனுக்கு அடங்கியவை. தென்புறம் கடலாகும். எனவே, இவனது நாட்டுக்கு எந்த வகையில் வரம்பு (எல்லை) கூறுவது. மேலே உள்ள வானத்தைக் கூறுவதைத்தவிர வேறுவழியில்லை. எனவே, ‘வான வரம்பன்’ என்று இவனைப் பலரும் சிறப்பித்துக் கூறி மகிழ்ந்தனர்.

இந்தப் புகழ்ச்சிகளைப் பொருள் நுட்பத்தோடு கேட்டறிந்த முரஞ்சி யூர் முடிநாகராயர் அவனை நேரில் கண்டபோது அதே சிறப்புகளைப் பெருமிதத்தோடு வியப்பும் மகிழ்வும் தோன்றக் கூறி மகிழ்ந்தார்.

போரும் சோறும்

ஐவருக்கும் நூற்றுவருக்கும் போர் நடந்தது. ஐவர் என்பவர் பஞ்சபாண்டவர். நூற்றுவர் என்பவர் துரியோதனன் முதலானோர். இருவருக்கும் நடந்த போர் பாரதப்போர். இப்போரில் ஈடுபட்டவர் களுக்கெல்லாம் இவன் சோறு வழங்கினான்; பெருஞ்சோற்றுவிழா நடத்திச் சிறப்பாக வழங்கினான்; நண்பர், பகைவர் என்று வரை யறுத்துக் கொள்ளாது (வரையாது) எல்லோருக்கும் வழங்கினான்.

பாண்டியரில் பஞ்சவர், கௌரியர் என்போர் கிளைக் குடியினர் ஆவர். இந்தக் கிளைக்குடியினர்க்கிடையே போர் நடந்தபோது இவன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி கருதுகிறார். ‘பொலம்பூண் ஐவர்’ 2 எனச் சங்கப் பாடல் குறிப்பொன்று கூறுகிறது. அது பாண்டியரைக் குறிப்பிடுகிறது. எனவே, பாண்டியரும் ஐவர் எனத் தெரிகின்றது. நூற்றுவர் என்பார், ஈரைம்பதின்மரைக்


1. புறம். 2 2. மதுரைக். 775