பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 115 |
கொள்ளலாம். எனவே, இது கௌரியர் என்னும் துரியோதனன் முதலானோரைக் குறிக்காமல் பாண்டியரில் ஒரு குடியினராகிய ‘கவுரியரை’ குறிப்பிட்டிருக்கலாம். பாண்டிய நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது இவன் இரு படைக்கும் உணவு வழங்கியிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்புண்டு. பண்புநலன் பகைவர் செயல்களைப் பொறுத்துக்கொள்வதில் இவன் நிலம் போன்றவன்; சூழ்ச்சித்திறன் அகலத்தால் வானத்தைப் போன்றவன்; வலிமையில் காற்றைப் போன்றவன்; பகைவரை அழிப்பதில் தீப் போன்றவன்; கொடையில் நீரைப் போன்றவன். சுற்றம் பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், வேதநெறி திரிந்தாலும் இவனோடு உறவில் திரியாத தன்மை உடையது இவனது சுற்றம். இத்தகைய சுற்றத்துடன் இமயமலையும் பொதியமலையும் போல அசைவின்றி வாழவேண்டும் என்று இவன் வாழ்த்தப்படுகிறான். ஆட்சிப்பரப்பு பொதியத்திலும், புகழ்ப்பரப்பு இமயத்திலும் விளங்கி யமை நோக்கி இவன் இவ்வாறு வாழ்த்தப்படுகிறான். உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இருவரும் வெவ்வேறு அரசர்கள் உதியஞ்சேரல் | சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் | 1. செங்குட்டுவனுக்குப் பாட்டன் | பாரதப்போர் நடந்த காலத்தவன். கால்வழி தெரியவில்லை. | 2. பேய்க்கு பெருஞ்சோறு அளித்தான். | வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். | 3. பாடிய புலவர் கடைச்சங்க காலத்தவர் | பாடிய புலவர் தலைச் சங்கக் காலத் தவர் (களவியல் உரை). | 4. பகைவர்களை வென்றான் | பகைவர்க்கும் நண்பர்க்கும் நடு நிலையாளனாய் விளங்கினான். |
|