பக்கம் எண் :

118மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

பெயர் பெற்றிருக்கலாம். இந்தப் பெயர் நாளடைவில் மருவி நரிவெரூ உத்தலையார் என்று அமைந்திருக்கலாம்.

முதன் முதலில் கருவூருக்கு வந்த சேர அரசனாக இவன் இருப்பதால் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் அந்துவஞ்சேரலுக்கும் இவன் காலத்தால் முற்பட்டவன் என்று ஆகிறது. எனவே, புறநானூறு தொகுக்கப்பட்ட காலத்திற்கும் இவன் காலத்திற்கும் இடைவெளியாக ஐந்தாறு தலைமுறைகளேனும் இருக்க வேண்டும். இந்த நிலையில் பெயரின் திரிபு வழக்கு இயல்பே. திரிபு வழக்கால் எழுந்த கற்பனைக் கருத்து மிகுதி. இதில் ஓரளவு உண்மை இருக்குமானால் அஃது இந்த அரசனைக் கண்ட மகிழ்ச்சியால் புலவர்க்குத் தோன்றிய புத்துணர்வை உணர்த்துவதாய் இருக்கும்.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ1

நாடு

தண்பொருநை ஆறு பாயும் விறல் வஞ்சி நகர்க்கு இவன் வேந்தன்.2 இப்போதுள்ள தாராபுரம், வஞ்சி என்னும் பெயர் பெற்றிருந்தது. அந்தப் பகுதியில் இருந்துகொண்டு இவன் அரசாண்டான் எனத் தெரிகிறது.

வெற்றிகள்

இவன் கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்.3 அக் கோட்டையி லிருந்த வலிமைமிக்க வீரர்களைப் புறங்கண்டான். எந்தக் கோட்டையை வென்றான் என்பது தெரியவில்லை.

கொடை

இவன் தன் வெற்றி மகிழ்ச்சியில் பாணர்களுக்குப் பொன்னால் தாமரைப் பூக்கள் செய்து வெள்ளி நாரால் தொடுத்துப் பரிசில்களாக வழங்கினான். இவனது வெற்றிப் புகழை அதாவது, மறப்புகழைப் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன் இழைகள் செய்து வழங்கினான்.


1. புகழுர்த் தாமிழிக் கல்வெட்டு 11

2. புறம். 11. 5 - 7

3. புறம். 11 : 8 - 3