| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 119 |
புலமை நலம் இவன் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடுவதில் வல்லவன். இவனது பாடல்களில் ஒன்று மட்டும் மருதம்.4 பிற யாவும் பாலைத் திணை மேலன. பாடல்களில் உவமை நயங்களும் பிற நயங்களும் மிகுதி. எடுத்துக்காட்டாக ஒன்றைக் காணலாம். வேனில் காலத்தில் மரங்கள் தழைத்திருப்பதை இவன் கூறுகிறான். சோம்பல் இல்லாதவனிடம் செல்வம் தழைப்பதுபோல் மரங்கள் தழைக்கின்றன. அவனது செல்வத்தின் பயனைப் பலரும் துய்ப்பதுபோல் மரக்கொம்புகளில் வண்டுகள் படிந்து உண்கின்றன. சில மரங்கள் மாயவளின் மேனிபோல் கரும் பச்சையான தளிர்களை ஈனுகின்றன. அவள் மேனியிலே சுணங்கு இருப்பதுபோன்று அத் தளிர்களின்மீது பூந்தாதுகள் உதிர்ந்துள்ளன.5 கல்வெட்டுச் சான்று கருவூரை அடுத்த புகழூரில் சங்ககாலத்துக் கல்வெட்டு உள்ளது. தாமிழி எழுத்துகளாலான அக் கல்வெட்டில் ‘கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் பெருங்கடுங்கோ’ என்னும் குறிப்பு வருகிறது. இந்தக் குறிப்பு நம் பாலை பாடிய பெருங் கடுங்கோவையே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆயின், இவனது தந்தையின் பெயர் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று முடியும். செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப் பெருஞ்சேரலிரும் பொறை, குட்டுவன் இரும்பொறை என்னும் பெயரைக் கொண்ட இரண்டு ஆண் மக்கள் இருந்தனர் என்பதை முன்பே கண்டோம். இந்தச் செய்திகள் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர் என்னும் நிலையை உண்டாக்கும். இவனுக்கு இரண்டு பிள்ளைகள்தாம் இருந்தனர் என்று பாடல் ஒன்று கூறுகிறது.6 எனவே, மூவர் என்று கூறுவது
4. குறுந். 231 5. ‘மடியிலான் செல்வம்போல் மரன்நந்த அச்செல்வம் படியுண்பார் நுகர்ச்சிபோல் பல்சினை மிஞிறு ஆர்ப்ப, மாயவள் மேனிபோல் தளிர்ஈன அம்மேனித் தாய சுணங்குபோல் தளிர்மிசைத் தாதுஉக’ (கலி. 35 : 1 - 4) 6. ‘இளந்துணைப் புதல்வர்’ (பதிற். 70 : 21) |