120 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பொருந்தாது. குட்டுவன் இரும்பொறை என்னும் பெயர் நம் பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்கு வழங்கப்பட்ட பெயராக இருக்கலாம். இவன் தானே புலவனாக விளங்கியதனால் இவன்மீது வேறு ஒரு புலவர் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பிக்கவில்லை போலும். புகழுர்க் கல்வெட்டு பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்று குறிப்பிடுகிறது. பதிற்றுப்பத்துப் பதிகம் குட்டுவன் என்பவனின் மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்று குறிப்பிடுகிறது. இந்தச் செய்தி களும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவைபோல் காணப்படுகின்றன. பொறையன், கடுங்கோ ஆகிய பெயர்கள் ஒரே அரசனுக்கு வழங்கிய நிலையும் உண்டு என்பதை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்பவனது வரலாற்றில் காணலாம். இந்தச் செய்திகளையெல்லாம் திரட்டி நோக்கி இந்தப் பாலை பாடிய பெருங்கடுங்கோவை ஒன்பதாம் பதிற்றுப்பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை என்றும் கருதலாம். சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை நாடு குடநாட்டிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருந்தவன் இவன் என்பது இவனது பெயரிலிருந்து பெறப்படும் உண்மையாகும். போர் இடிபோன்று போர்முரசு முழங்கப் பெரும்படையுடன் படை யெடுத்துச் சென்று, எதிர்த்த அரசர்கள் அழியும்படி வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவன் இவன்.1dn7 ஒருமுறை இவன் பகை அரசனை அழித்த போது பகைவர்கள் கையற்று வருந்தினர்.2 இந்தச் செய்திகள் ஏதோ எல்லோரையும் பொதுப்படக் கூறுவது போல் கூறப்பட்ட செய்திகளாக உள்ளன. சிறப்பாக இவனது போரைப்பற்றிக் குறிப்பிட ஒன்றுமில்லை. கொடை பெருங்குன்றூர்கிழார் இவனிடம் பரிசில் பெற வந்தார்; வள்ளல் என்று இவனைப் புகழ்ந்து பாடினார். தாயிடம் பால் இல்லாமையால் பாலுண்ண மறந்த தன் குழந்தையின் நிலையைக் கூறித் தன் வறுமை
1. புறம். 210 : 13 - 14 2. ௸ 211 : 5 - 6 |