பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 121 |
நிலைமையையும், பக்கத்து வீடுகளுக்குச் சென்றேனும் உண்டு வாழும் எலிகூட உணவின்றிச் செத்து மடிந்துள்ள தன் வீட்டுச் சுவரைக் கூறித் தன்னைச் சூழ்ந்துள்ள வறுமையையும் கூறிப் பரிசில் நல்குமாறு வேண்டினார். அவன் முதல் நாள் பரிசிற் பொருளைக் காட்டி நல்குவதுபோல் பாசாங்கு செய்தான். புலவர் மறுநாளும் பாடினார். தரவில்லை, மூன்றாம் நாளும் பாடினார். முடிவு தெரியவில்லை. கொடுத்திருக்கலாம். மாந்தரன் மாந்தரன் என்னும் பெயர் தனித்தும் பல்வேறு அடை மொழி களுடனும் காணப்படுகிறது. மாந்தரன்1, மாந்தரம் பொறையன்கடுங்கோ,2 சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை3, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை,4 சேரல் மாந்தரஞ் சேரல் இரும் பொறை,5 கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும் பொறை6 இவ்வாறு ஆறு வேறு தொடர்மொழிகளால் குறிப்பிடப்படும் மாந்தரன் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. எனவே, தனித் தனியே இவர்களைப் பற்றிய செய்திகளை முதலில் காண்போம். மாந்தரன் ஒன்பதாம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை மாந்தரனின் வழிவந்தவன்.
1. பதிற். 90 : 13 2. அகம். 142 : 4 - 5 3. புறம். 125 4. ௸ 22 5. ௸ 53 6. ௸ 229; ஐங்குறுநூறு தொகுப்பித்தவனைப் பற்றிய குறிப்பு ‘கடுங்கோ’ என்பதும் ஒரு நாட்டின் பெயர் ‘பொருந’ என்று அரசனைக் குறிப்பிடுகையில் அவன் பொருந்தி அதாவது, தங்கி அரசாண்டதை எல்லா இடங்கிளிலும் உணர்த்தும்வகையில் சங்கப் பாடலில் ஆட்சி உள்ளது. ‘கோ’ என்பது அரச சாதியையும், சேரமான் என்பது குடியையும், யானைக்கண் என்பது வடிவையும், சேய் என்பது இயற்பெயரையும், மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பது சிறப்புப் பெயரையும் உணர்த்துகிறது என்பது பரிமேலழகர் கருத்து. (குறள். 355 உரை.) |