122 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
நல்லாட்சி இந்த மாந்தரன் அறக்கடவுள் வாழ்த்தும்படி நல்லாட்சி புரிந்தவன். இவனது ஆட்சியில் கோள்நிலை திரியவில்லை வானம் பருவமழை தவறாமல் பொழிந்தது. மக்களுக்கு அச்சம் என்பதே இல்லை. இவனது நாட்டிலிருந்த பொருள்களுக்குப் பாதுகாப்பு மிகுதி. மக்களிடம் அறியாமை என்பது இல்லை. சமூகவாழ்வில் இன்பம் பெருக்கெடுத்திருந்தது. கல்வி பல்வேறு துறைகளில் பல்வேறு அறிஞர்களிடம் துறைபோகிக் கிடந்தது. திறை பெறல் வாள்வேந்தர்கள் பலர் இவனுக்குக் களிறும் கலமும் பரிசிலாகத் தந்து இவன் சொன்னபடி செயலாற்றி வந்தனர். மாந்தரம் பொறையன் கடுங்கோ நாடு இவன் பெயரில் ‘மாந்தரன்’ என்று வாராமல் ‘மாந்தரம்’ என்று வருவதால் இது நாட்டின் பெயர் என்பது பெறப்படுகிறது. பொறையன் என்பது பொறை நாட்டோடு தொடர்பு உடையது. கடுங்கோ என்பது ‘இருங்கோ’, ‘இளங்கோ’ என்பன போல் அரசன் பெயராகும். புகழ் பரிசில் வேண்டிச் சென்றவர்களின் கொள்கலம் நிறையும்படி கொடை வழங்கினான். இவனது வள்ளன்மையைப் புலவர்கள் போற்றிப் பாடினார்கள். அவர்கள் செந்நா மேலும் சிவப்புறும்படி பாடினார்களாம். படை வெல்லுதற்கு அரிய படை இவனிடம் இருந்தது என்று கூறப்படுவது பொதுப் புகழ்ச்சியாகப்படுகிறது. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை1 புறநானூற்றைத் தொகுத்தவர், இவனுக்கும் சோழ அரசன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்கும் நடந்த போரைக்
1. புறம். 125 : 13 - 17 |