பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 123 |
குறிப்பிடுகிறார். போரில் இவன் தோற்றான். சோழன் வென்றான். சோழனது வெற்றிக்குக் காரணம் சோழனது ஆற்றல் அன்று. சோழனுக்குத் துணையாகத் தேர்வண் மலையன் என்னும் சிற்றரசன் இருந்ததே ஆகும். இந்தச் செய்தி பாடலிலும் கூறப்பட்டுள்ளது. பாடலில் அரசர்களுடைய பெயர் குறிப்பிடப்படவில்லையே அன்றிப் பாடலில் உள்ள செய்தியும் புறநானூற்றைத் தொகுத்தவர் கொளுவில் தரும் செய்தியும் ஒன்றே. எனவே, இவனைப்பற்றிக் கூறப்படும் போர்ச்செய்தி ஐயத்திற்கிடமின்றி உண்மை எனத் தெரிகிறது.1 சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை யானையைப் போல் கூர்மையான பார்வையும் முருகனைப் போன்ற அழகும் உடையவனாக இவன் விளங்கியமையால் இவனது பெயரில் ‘யானைக்கண். ‘’சேய்’ என்னும் அடைமொழிகள் முறையே அமைந்தன. பாடலில் ‘வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்’ என்று இந்த அடைமொழி குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு மரந்தை அல்லது மாந்தைத் துறைமுகத்தைத் தலைநகராகக் கொண்ட நாடு மாந்தர நாடு. இந்த நாட்டுக்கு இவன் அரசன் என்பது இவனது பெயரால் விளங்கும் உண்மையாகும். வெற்றிகள் வயலும், மலையும், மணலும், கழியும், கானலும் தன்னகத்தே கொண்ட தொண்டி நகரில் இருந்தவர்களோடு இவன் போரிட்டு அவர்களை அழித்து வென்று சிலகாலம் தங்கி அரசாண்டான்.2 கொல்லி வெற்றி தொண்டி நகரில் போரிட்டு வென்று சிலகாலம் அங்குத் தங்கி அரசாண்டதுபோலவே கொல்லியிலும் சிலகாலம் தங்கி அரசாண்டான்.3 சிறைபட்டு மீளல் இவன் மேலே கூறியவாறு பல வெற்றிகள் பெற்று ஆளுகையில் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி
1. புறம் 22 2. ௸ 17 : 27 3. ௸ 22 : 20 - 28 |