124 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
யனின் பகையைத் தேடிக்கொண்டான். இந்த நெடுஞ்செழியன் இவனைத் தந்திரமாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தான். யானை பொய்க்குழியில் விழுந்தது இவன் சிறைப்பட்டதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளபடியால் பாண்டியன் இவனைப் போரில் வென்று கைது செய்யவில்லை; தந்திரமாகக் கைது செய்தான் என்பது தெரிகிறது. குழியை அழித்துவிட்டு யானை தப்பிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டது. இவன் சிறையிலிருந்து தப்பிச் சென்ற செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதால் இவன் பிறருடைய உதவியின்றித் தானே சிறையைத் தகர்த்தெறிந்து விட்டுத் தப்பிவிட்டான் என்பது தெரிகிறது.4 பகையரசர் பணிவு இவனை அண்டினால் தாம் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம் என்று சில அரசர்கள் இவனைப் பணிந்தனர்.5 இவன் சினந்தால் தம் கோட்டையை அழித்து விடுவான் என்று சிலர் இவனைப் பணிந்தனர். வேந்தர்கள் பணிந்து திறை கொடுத்தனர். படை இவனது தோல்படை மேகக் கூட்டம் போன்றது. யானைப் படை மலைபோல் உயர்ந்த யானைகளைக் கொண்டது. இவை கடல்போல் பெரியன.6 இவனது வீரர்கள் பனம்போழைச் செருகிக்கொண்டு வெறிக் குரவை ஆடினர். கொடைத்தன்மை இவன் முரசு முழக்கி இரவலரை அழைத்துக் கொடை நல்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. இவனிடம் பரிசில் பெற்றபின் வேறொருவரிடம் சென்று பெற வேண்டி நிலை இல்லாதவாறு இவன் மிகுதியாகக் கொடுத்தான். தனக்கு வேண்டுமென்று எதையும் வைத்துக்கொள்ளாது கொடுத்தான்.7
4. புறம். 17 5. ௸ 17 : 30 - 34 6. ௸ 17 : 34 - 36 7. ௸ 229 : 25 - 27 |