பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 137 |
மருதம் பாடிய இளங்கடுங்கோ5 குடும்பத் தலைவன் குடும்பத் தலைவியை விட்டுவிட்டு வேறொருத்தி நலத்தைத் துய்க்கும் கொடுமையை விளக்கும் மருதத்திணைப் பாடலை இவன் பாடியுள்ளான்.6 மகனைப் பெற்ற பின்னும் கணவனைக் காணாது வாழ்கிறாளே அவள் ‘என்ன கடத்தளோ’ (எத்தகைய கடப்பாட்டாளோ) என்று இவன் குறிப்பிடுகிறான்.7 இவன் பருவூர்ப் போர்க்களத்தில் சோழனுக்கும், சேர பாண்டியர்க்கும் நடந்த போரில் சேர பாண்டியரைப் போரில் கொன்று. ‘அஃதை’ என்னும் பெண்மணியின் தந்தை வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டுள்ளான்.8 முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்9 காதலனுக்குக் காதலியின் தோழி அறிவுரை கூறுகிறாள். துறைவ, ‘ஒரு நாள் வந்து, உன் வண்ணம் எப்படி என்று கேட்டு விட்டுச் சென்றால் உன் பெருமைக்குக் குறைவு வந்து விடுமோ’ என்பது அவள் கூற்று. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை இவ்வாறு நயமாகக் கூறுவதாகப் பாடியுள்ள இவனது புலமைத் திறம் பாராட்டுதலுக்கு உரியது. இவன் எங்கு முடங்கிக் கிடந்தான்? ஏன் முடங்கிக் கிடந்தான்? முடப் பட்டுக் கிடந்தானா? என்பன போன்ற வினாக்கள் இவன் பெயரிலுள்ள அடைமொழியில் தோன்றும்; விடைக்குச் சான்று இல்லை. சேரன் செங்குட்டுவன் சங்க காலச் சூழ்நிலை சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்கிறபோது அவ்வரசன் வாழ்ந்திருந்த காலநிலை, சூழ்நிலை முதலியவைகளை
5. அகம். 96, 176 6. நற். 59 7. அகம். 176 : 21 8. ௸ 96 : 10 - 15 9. அகம் 30 |