பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்139

பரையில் ஒன்பது தாயாதிகள் இருந்தனர். அவர்கள் முடி மன்னனாகிய பெரிய சோழ அரசனுக்குக் கீழடங்கிச் சிற்சில நாடுகளை யரசாண்டனர். ஆனால், அவர்கள் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சோழ குலத்து அரசர் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டதைச் சங்க நூல்களில் காண்கிறோம். தாயாதிகள், சமயம் நேர்ந்த போதெல்லாம் முடியரசனுடன் போர் செய்து கலகம் உண்டாக்கினார்கள். கரிகாற் சோழன் அரசு கட்டில் ஏறினபோது ஒன்பது தாயாதிகள் அவனுக்கு எதிராகக் கலகஞ் செய்து போரிட்டார்கள். அவர்களையெல்லாம் அவன் வென்று அடக்கிய பிறகு முடி சூடினான். கரிகாற் சோழன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் சிம்மாசனம் ஏறியபோதும் ஒன்பது தாயாதிகள் கலகஞ் செய்து போரிட்டார்கள். அப்போது, செங்குட்டுவன், சோழரின் உள்நாட்டுப் போரில் தலையிட்டுப் போர்செய்து தன் மைத்துனனான கிள்ளி வளவனைச் சிம்மாசனம் ஏற்றினான். தாயாதிப் போர் ஒருபுறமிருக்க, சோழ, அரசர்களில் அண்ணன் தம்பிகளும் சில வேளைகளில் ஒருவருக் கொருவர் போர் செய்தனர். தகப்பனும் மகனுங் கூடத் தங்களுக்குள் போர் செய்து கொண்டதைச் சங்க இலக்கியங் களில் பார்க்கிறோம்.

ஆனால், சோழர்களுக்கு நேர்மாறாகச் சேர அரசர் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தனர். சேர அரசர்களில் தாயாதி அரசர்கள்கூட சண்டையிட்டுக் கொள்ளவில்லை. சேர அரசர் தங்களுக்குள் போர் செய்துகொண்டதைச் சங்க நூல்களில் காணக்கிடைக்கவில்லை. சேர அரசர் ஒற்றுமையாக இருந்த காரணத்தினால்தான் கொங்கு நாட்டையும் துளு நாட்டையும் கைப்பற்ற முடிந்தது.

சோழர் குடியில் ஒன்பது தாயாதிகள் இருந்ததையும் அவர்கள் சோழ நாட்டின் பகுதிகளை (ஒரே சமயத்தில்) முடிபுனைந்த அரசனுக்கு அடங்கி ஆட்சி செய்ததையும் கூறினோம். அது போலவே, சேர அரசர் பரம்பரையில் மூத்த வழியரசர் இளையவழி அரசர் என்று இரு தாயாதிகள் இருந்தனர். இவர்களும் ஒரே காலத்தில் சேர இராச்சியத் தின் வெவ்வேறு பகுதிகளை யரசாண்டார்கள். பாண்டியர்களில் மதுரைப் பாண்டியனும் கொற்கைப் பாண்டியனும் என்று இரண்டு அரசர்கள் ஒரே காலத்தில் அரசாண்டதைச் சங்க நூல்களில் பார்க்கிறோம். பாண்டிய இளவரசன் கொற்கையில் இருந்தான். ஆனால், அவர்களில்